பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆனால் மனசுக்குள்ளே அவன்மேலே ரொம்பப் பிரியமாக இருக்கிறாள் என்பது ராமுத்தாயிக்குத் தெரிந்தது. ஒரு நாள் முதலாளி கோபாலை ஆபீஸ் ரூமுக்குக் கூப்பிட்டு ரெண்டு வேட்டி, ரெண்டுபாலிஷ்டர் சட்டைத்துணி, நூறு ரூபாய் குடுத்தாராம். இவன் 'எதுக்கு மொதலாளி வேண்டாம் னு மறுத்தானாம். தீபாவளி போனஸ்’னு மொதலாளி சொன்னாராம். 'எல்லாருக்கும் குடுக்கும் போது வாங்கிக்கிடறேன்’னு இவன் எவ்வளவோ சொன்னானாம். 'உன்னுடைய நாணயம், நல்ல மனுஷத்தனம், விசுவாசத்துக்காகத் தான் அப்படின்னு எவ்வளவோ குழைவாக முதலாளி பேசினாராம். இவன் அதையெல்லாம் வாங்கிட்ட பின்னாடி ப்யர்மேன் வேலையிலிருந்து மேஸ்த்திரியாப் போடறதாச் சொன்னாராம். அப்புறம் மெள்ள சீதையை ஒரு நாளைக்கு தனக்கு ஏற்பாடு பண்ணிட்டா இன்னும் எவ்வளவோ சலுகை செய்யறதாக முதலாளி சொன்னவுடனே.... ரூபா, வேட்டி துணிகளை எல்லாம் அவன் மொகத்திலே வீசி எறிஞ்சு, ஓங்கி அவன் கன்னத்திலே அறைஞ்சு கழுத்தப் புடுச்சு நெரிச்சுட்டானாம். போலீஸ் அவனைப் பிடிச்சுட்டுப் போயிருச்சு. சீதை வந்து 'ராமுத்தாயி தூக்குச் சட்டிகளை கொண்டுக்கிட்டு நீ போ. நான் அப்புறமாக டவுண் பஸ்ஸிலே வர்ரேன்'ட்டு போனவள் தான். திரும்பி வரவே இல்லை. - ஐயா ஊர்லே ஆளுகளைக் கூட்டிக்கிட்டு மச்சான் ஊருக்கு போய்ட்டு திரும்பி வரும் போதே தலைய முழுகிட்டுத்தான் வந்தார். அம்மா அழுதாள்... அழுதாள்... இப்படின்னு சொல்ல முடியாது. நம்மளப் பொறுத்தவரை அவள் செத்துப் போய்ட்டாள். எல்லாரும் தலை முழுகிறனும்’னு ஐயா கண்டிப்பாச் சொல்லிட்டார். தம்பி தங்கச்சிக்கெல்லாம் அம்மா தலையில் எண்ணெயைத் தேய்ச்சு முழுகாட்டினாள். ராமுத்தாய் 'தலைய முழுக முடியாது'ன்னு அழுதாள். அம்மா துடுப்பை எடுத்து அடிச்சு அவள் தலையிலேயும் எண்ணெயைத் தேய்ச்சு முழுகாட்டினாள். 'நீ வேலைக்குப் போய் எங்களைக் காப்பாத்தினது போதும்"னு ராமுத்தாயை நிறுத்திட்டாங்க. ஆனால் வீட்டிலேருக்கற வறுமையினாலே வேறு ஒரு தீப்பெட்டி ஆபீஸ் மேஸ்த்திரிகிட்ட பேசி பத்தாவது நாள்லே வேலைக்கு அனுப்பிட்டாங்க... &具