பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொழுதடைய அக்காவும் மச்சானும் வந்தார்கள். ப்ார்த்த உடனே "ராமுத்தாயி"ன்னு சீதை ஓடிவந்து கட்டிப் பிடித்தாள். 'எப்படா வந்தே...?'ன்னு மச்சான் வாயெல்ல்ாம் பல்லாக நின்றார். அக்காள் கட்டிப் பிடித்துக்கொண்டே அழுதாள். "ஏ..யக்கா...' ன்னு ராமுத்தாயும் தேம்பித் தேம்பி அழுதாள். கோபால் அசையாமல் பார்த்து நின்னுக்கிட்டிருந்தான், ரெண்டு பேரும் ரொம்ப மெலிஞ்சு கருப்பாக இருந்தாங்க... மச்சான் சட்டை போடலை. தலையிலே துண்டாலே தலைப்பாகை கட்டிக்கைலியை மடிச்சுக் கட்டியிருந்தார். பார்க்கப் பாவமாக இருந்தது. அக்காள் ஒடாக மெலிஞ்சு இருந்தாள். காரை எலும்பெல்லாம் தெண்ணிக்கிட்டு தெரிஞ்சது. கன்னத்து எலும்பு துருத்திக்கிட்டு இருந்தது. வெளிறிப்போன நைலக்ஸ் சேலையைக் கட்டியிருந்தாள். அவள் தலை எண்ணெய்ப் பிறப்பைப் பார்த்து ரொம்ப நாள் ஆகியிருந்தது. 'சீதே... கம்பை அப்பதையே இடிச்சு வச்சுட்டேன்மா. காரிப் ப்ோகப் போகுது. சட்டுன்னு தீப்பத்த வச்சு ஒலையிலே போடும்மா'ன்னு மாமா சொன்னார். அக்காள் வீட்டுக்குள்ளே ஒடிப்போய் ஒரு பையும் பாட்டிலும் எடுத்துக்கிட்டு வந்து மச்சான் கையிலே கொடுத்து 'மல்லிக்குப் போய் ஒரு கிலோ அரிசி, கால் கிலோ உருளைக் கிழங்கு, நூறுதுவரம் பருப்பு, நூறு தக்காளி, ரெண்டு முருங்கக்காய், பத்துப் பைசாவுக்கு பச்ச மிளகா., நூறு பாமாயில் வாங்கிக்கிட்டு கொஞ்சம் கருவேப்பிலை கேட்டு வாங்கிக்கிட்டு, சட்டுன்னு வாங்க 'ன்னு அனுப்பினாள். - 'யக்கா... பொழுதடைஞ்சப் பெறகு மச்சானை மல்லிக்கு அனுப்ப வேண்டாம். நீ கம்மஞ் சோத்தக் காச்சு. நான் சும்மா... சாப்பிட்டுக்கிடுறேன்"னு எவ்வளவோ சொல்லியும் அவள் காதிலே போட்டுக்கிடவே இல்லை. 'நீ சும்மா இரு தாயி ன்னு மச்சானை வேகமாக அனுப்பினாள். 'அண்ணன் கருப்பசாமிகிட்ட கொஞ்சம் சைக்கிள் கேளுங்க... எங் கொழுந்தியா ஊர்லேருந்து வந்திருக்காள். கொஞ்சம் மல்லி வரைப் போய் அரிசி வாங்கிட்டு வரணும்னு கேளுங்க... அந்தண்ணன் 83