பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தழுதழுத்தது. கண்கள் மீண்டும் கலங்கியது. கோபாலும் கலங்கினான். - 'ஆனால்... என்னமோ பெறந்த மண்ணப் பார்க்கணும். பெத்தவங்களப் பார்க்கணும். கூடப் பெறந்தவங்களப் பார்க்கணும்னு. ரொம்ப. ஆசையா. இருக்கு.... "நம்ம பிள்ளையார்கோயில்... ஊர்த்தண்ணிக் கெணறு... நம்ம ஊர் ஆலமரம்..., கம்மா..., மதினி குருவம்மா. சின்னாத்தா வெயிலு வந்தாள். சின்னையா... அக்காள் வீரம்மா... மச்சான், நம்ம வீட்டு நாயி...எல்லாத்தையும் பார்க்கணும்னு ஆசையா இருக்கு... நம்ம ஊருக்கு வரணும் போல இருக்கு' சீதை வாயிலிருந்து சொற்கள் வர்றதுக்கு முன்னாடி பலத்த அழுகை வந்து விட்டது. மூன்று பேரும் அமைதியானார்கள். "இதையெல்லாம் நெனச்சு நெனச்சுத்தான் எனக்கு அழுகையா இருக்கு... ஐயா வீட்டுக்கு வந்து சருவப்பானை... குடம்., குண்டாச்சட்டி வட்லு, செம்பு வாங்கிட்டு வந்திரனும்னு எனக்கு ஆசையில்லை' நின்னுக்கிட்டே அழுதாள். திறந்த வெளியிலே இப்படி அக்கா அனாதையாகி அழுகறது. ராமுத்தாய்க்கு கஷ்டமாக இருந்தது. அக்காள் பாவம்' 'சீதா... வீட்டுக்குப் போத்தா... வீட்டுக்குப் போ... ன்னு மச்சான் அக்காள் கண்ணிரை ஆதரவாகத் தொடச்சு அனுப்பி வைத்தார். . ஊர்லே ஐயாவும் அம்மாவும் ராமுத்தாயை எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள். ராமுத்தாய் வந்தவுடன் ஐயா அவளைச்சாட்டைக் கம்பை எடுத்து அடித்து நொறுக்கினார். நான் செஞ்சது தப்புத்தான். இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்னு சொல்லு'ன்னு சொல்லிக் கிட்டே அடி அடின்னு அடித்தார். சாட்டைக் கம்பு சல்லி சல்லியாகச் சிதறியதே தவிர அவள் "ஏ ... யய்யா.... அக்கா நல்ல்வயா. அக்கா ஒரு தப்புஞ் செய்யலையா... ன்னு சொல்றதத் தவிர வேற சொல்லவே இல்லை. - ஐயா ரொம்ப மானஸ்தர்; ரோஷக்காரர். 'இந்தச் சின்னப் பொட்டக் கழுதைக்கு எவ்வளவு ராங்கித்தனமுன்னு பாரேன்..." ன்னு உள்ளுக்குள் உடைந்து கொதிப்படைந்தார். வால் கயிற்றை