பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடுத்து ராமுத்தாயை தூணில் புடுச்சுக் கட்டிட்டு ஊணு கம்பை தேடி எடுத்துக்கிட்டு ஓடி வந்தார். அம்மா ஒடி, "அவளக் கொண்றாதீங்க... உங்களுக்குள்ள ரோஷமும் மானமும் வீரமும் தானே... உங்க பிள்ளைகளுக்கும் இருக்கும். அவளைக் கொண்றாதீங்க...'ன்னு மல்லுக் கட்டிக் கிட்டிருந்தாள். ஊரே கூடி விட்டது. "ஏ...யைய்யா அக்கா நல்லவயா... அவ ஒரு தப்பும் பண்ணலையா. அவளஊருக்கு கூட்டிட்டு வாய்யா...'ன்னு ஊரே வெடிக்கிற மாதரி ஒலமிட்டுக் கொண்டிருந்தாள் ராமுத்தாய். 女 கொள்ளி ஒடையிலே ஊரேகூடி இருக்கிறது.ஒரே மெளனம், எவ்வளவு பரபரப்பு இருந்தாலும் அப்படியொரு நிசப்தம். கொள்ளி ஒடையிலே கூட்டம்னா யாரோ தூக்குப் போட்டோ, கிணற்றில் விழுந்தோ, மருந்தக் குடிச்சோ செத்துட்டாங்கன்னு அர்த்தம். சாதாரணமாகச் செத்தவங்களை எல்லாம் சுடுகாட்டிலே தான் புதைப்பாங்க... ஆனால் இது மாதிரி சாவுக்காரங்களை கொள்ளி ஒடையிலே போட்டுத்தான் பொசுக்குவாங்க... வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. சிப்பிப்பாறை வரிசைப் பனைப் பக்கமாக இருந்து அலறல் சத்தம் கேட்டது. ஊர்முகம் சிப்பிப் பாறையைப் பார்த்தது. அலறல் பெருகி அலை அடித்தது. மார்பிலே அடிச்சிக்கிட்டு வர்ற ஒரு பொம்பளையும், ஒரு ஆம்பளையும் தெரிந்தது. . 'சீதையும் அவள் மாப்பிள்ளையும் வாராங்க... ஏய் கொஞ்சம் மண்பூசறத நிறுத்தப்பா..." பல குரல்கள் ஆணையிட்டன. நிறை கர்ப்பிணியாக சீதை கூட்டத்தை நெருங்கிய பொழுது கூட்டத்தினர் மனம் பதை பதைத்தது. அவள் புருஷனைப் பலர் கூர்ந்து பார்த்தனர். அம்மா ஒடிப்போய் அவளைக் கட்டிப்பிடித்து ஒலமிட்டாள்... 'எல்லாப்புள்ளைகளும் நூறு ரூபா அட்வான்ஸ் வாங்கிட்டு வந்திருக்கே. நீ என்னடி அம்பது ருபாதான் குடுத்தாங்கன்னு 86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/87&oldid=463993" இலிருந்து மீள்விக்கப்பட்டது