பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாதிக்கிற... ஒழுங்கா உண்மையைச் சொல்லிருன்னு எவ்வளவோ தட்டுப் பார்த்தேனே, சொல்ல மாட்டேன்டாளே... உங்க ஐயா வந்து இன்னைக்கு ஒன்னக் கொண்ணு தூக்கப்போறாருன்னு சொன்னேன்... நம்ம ஐயா வந்து நம்மளக் கொல்ல வேண்டாம். நாம்ளே செத்துப் போவோம்னு எம்மக போயிட்டாளே." ஏ... ராமுத்தாயி... ஏ.ராமுத்தாயி...எஞ்செல்லம்.. எஞ்செல்லம்.. அறிவு மாணிக்கமே. அறிவு மாணிக்கமே "ண்னு மார்பிலே மார்பிலே அடிச்சிக்கிட்டுக் கதறினாள் சீதை. 'ஏய... நெற வயித்துப் புள்ளக்காரி. இப்படித்தானா நெஞ்சிலே நெஞ்சிலே... போட்டு விளமெடுத்துப் போய் அடிப்ப'ன்னு ஒருத்தி அவள் கைகள் ரெண்டையும் பிடித்துக் கொண்டாள். 'நான் வேண்டவே வேண்டாம்னனே...திரும்பக் கொண்டுட்டுப் போயிருண்ணனே.... அவதலைமேலே சத்தியம் பண்ணிட்டாளே, கைத்தறியிலே மச்சானுக்கும் அக்காளுக்கும் கடன்லே வேட்டி, சேலை எடுத்துக்கிட்டு அக்காஊருக்குப் போய்ட்டு வந்திருன்னு ஐயா சொன்னாருன்னு சத்தியம் பண்ணிட்டாளே." 'தீபாவளிச் செலவுக்கு இருபது ரூபாயும் ரீவில்லிப்புத்துர் கவர்மென்ட் ஆஸ்பத்திரியிலே பிரசவம்பார்க்கறதுக்கு முப்பது ரூபாயும் செலவழிச்சிக்கிடட்டும்னு ஐயா அம்பது ரூபா குடுக்கச் சொன்னாருன்னு சொல்லிட்டாளே..." "ஏ... தாயி ஆறு மாதத்துக்கு முன்னாடி இங்கே வந்ததுக்கே. ஐயா உன்னை துண்லே கட்டி வச்சு அடிச்சாரே... வேண்டாந்தாயி, இங்கே வந்ததே தெரியாதபடி ஒடனே கிளம்பிருன்னு எவ்வளவோ கெஞ்சினனே.... பாதகத்தி ஐயாதான் குடுத்திட்டு வரச் சொன்னா ருன்னு சாதிச்சிட்டாளே... "ஏ...தாயி எங்களை எல்லாம் விட்டுட்டு இப்படிக் கொள்ளி ஒடையிலே போகத்தான் அப்படிச் சாதிச்சயா...?" ராமுத்தாயின் தற்கொலைக்கான காரணம் வெளியாகி விட்டது. கூட்டத்திலிருந்தவர்களின் முகத்தில் அற்பயிரகாசம். கசமுசா பேச்சுக்கள் அங்கும்....இங்கும். 'விடிஞ்சா. தீபாவளி. விடிஞ்சா... ஒன்னப் பொசுக்கின தீயாத்த வச்சுட்டேயே. தாயி... எங்களுக்கு என்னைக்கு தீபாவளி 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/88&oldid=463994" இலிருந்து மீள்விக்கப்பட்டது