பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரும்? எங்க வயித்திலே... எரியற தீ... என்னைக்கு ஆறும்? அந்த; சீதையின் இந்த கர்ண கொடுரமான ஒலத்தில் அனைவரும் கசிந்தனர். 'என் கட்டித் தங்கத்தை முழுசா சேதாரமாக்கிட்டேனே என் கட்டித் தங்கத்தை... முழுசா. சேதார மாக்கிட்டே...னே அம்மா ஐயா கால்களில் வீழ்ந்து கதறிக் கொண்டிருந்தாள். மேலே சட்டையில்லாமல் ஒட்டி உலர்ந்த உடம்பில் மடிக்கத் கட்டின வேட்டியிலேயும், முதுகிலேயும் தொளி வெட்டின் சேற்றோடு, மார்பில் கைகளைச் சேர்த்துக்கட்டி, வடக்கே வானத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்த மானஸ்தர் ஐயாவின் உடம்பு குனிந்து குனிந்து பின்விறைத்து விறைத்து நிமிர்ந்து கொண்டிருந்தது. Δ