பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இத்தொகுப்பில் உள்ள நெடுங்கவிதை ‘காதலுக்குப் \ பல முகங்கள் ஆகும். இதை எழுதியவர் ஹெலன் ஷெப்பீல்டு என்னும் அமெரிக்கப் பெண்மணி. அவரைப் பற்றிய வேறு விவரங்களைத் திரட்டித் தர மொழிபெயர்ப்பாளர் தமிழ்நாடன் முயன்று பார்த்தார். போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. கவிஞரைக் காட்டிலும் கவிதைதான் நமக்கு முக்கியம். ஒரு நல்ல கவிதை, பழமைக்கும் பழமையான காதலைப் பற்றிய நவீன கவிதை.... இதில் தமிழ்ப்புதுக்கவிதைகள் சில இடம் பெற்றுள்ளன. அபி இரண்டு கவிதைகளை எழுதியுள்ளார். தேர்ந்தெடுத்தும் கூட இன்னும் வெளியிட முடியாமல் கைவசம் பல கவிதைகள் உள்ளன. 1984-இல் மலேசிய-சிங்கப்பூர்ப் பயணம் மேற்கொண்டபோது கவிஞர் அப்துல் ரகுமான் மலேசிய இதழ் தமிழ்ஒசைக்கு அளித்த பேட்டி இதில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. ரகுமான் எந்தத் தயக்கமும் இல்லாமல் சுதந்திரமாக கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார். பயனுள்ள பேட்டி. ★ தமயந்திக்காக அன்று ஒரு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது; போலி நளன்களுக்கிடையில் உண்மை நளனை அடையாளம் கண்டு மாலையிட்டாள் தமயந்தி. வாசகர்களே! இதோ உங்களுக்காக ஒரு 'சுயம்வரம். நல்ல எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்துத் தருகிறது அன்னம்; மாலையிட வாருங்கள். மீரா.