பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வேறில்லை. ஓ, இரவுதான் எவ்வளவு இதமானது. உலகம் துரங்கும் போதுதான் அழகு விழித்துக் கொள்கிறது. இரவில் தூங்குபவர் களெல்லாம் கண்ணில்லாதவர்கள், பாவிகள், சபிக்கப்பட்டவர்கள். இரவோடு இணைந்து இசை இருக்கிறது. நுட்பமான காதுக்குத்தான் கேட்கும். நிசப்தத்திற்கு அந்த இசையில் பெரும் பங்குண்டு. ஒரு அதி உன்னத மிருதங்கக் கலைஞனின் துரிதகதி வாசிப்பில் சட்டென்று, உயிரைக் கவ்வும் ஒரு கணநிசப்தம் விழுமே. அதைப்போன்ற நிசப்தம். இந்த இசைக்குத் தொட்டுக் கொள்ள, சில சமயங்களில் காலெட்டில் அர்த்தமும் துணுக்கமும் தெரியாத ஆனால் ஆத்மாவை உருக்கும் ஹிந்துஸ்தானி போட்டு விடிய விடியக் கேட்பான். - ஒருநாள் இரவு. திடீரென்று அவள் இப்போது தூங்கிக் கொண்டிருப்பாளா, இல்லை தன்னைப்போல் தூக்கம் வராமல், தெருவையொட்டிய தன் அறை ஜன்னல் வழியே வானத்தையும், நிலவையும் பார்த்துக் கொண்டிருப்பாளா என்று அவன் நினைக்கத் தொடங்கினான். சற்று நேரத்தில் அவன் முற்றிலும் அமைதியிழந்து போனான். உடனே அவள் வீடுவரை போய்ப் பார்க்க வேண்டும் என்ற அலைக்கலிப்பை அவனால் தவிர்க்க முடியவில்லை. அம்மாவிடம் சாக்குச் சொல்லிவிட்டு அவள் வீட்டை நோக்கி நடந்தான். இந்தத் தெருமுனையில்தான் எத்தனை முறை காத்து நின்றிருப் பான். இந்தக் கடைசிவிட்டில் அவன் நண்பனிருந்தது வசதியாய்ப் போயிற்று. காலையில் கல்லூரிக்குப் போகும் போது அவளைப் பார்க்காவிட்டால் அவனால் சாப்பிட, துரங்க, சுவாசிக்கக் கூட முடியாது. அவள் வரும் நேரம் காத்து நிற்பான். அவள் வீட்டிலிருந்து தெருவைமிதித்ததும் நண்பனுக்காக காத்திருந்த பாவனையெல்லாம் பறக்க அவளை எதிர்நோக்கி நடப்பான். அவளை நெருங்கும் போது அவன் கண்ணும், உதடும் தன்னைமீறி மெல்லியதாகச் சிரிக்கும். ஆனால் தனிமையில் இவனையே விழுங்குகிறாற் போல பார்க்கும் கண்கள் பார்த்தும் பாராதது போல் போகும். இவன் தன்னிதழ் பொருத்தி முத்தம் பதித்திருக்கும் அந்த இதழ்கள் சிறு சுளிப்பு கூட இன்றிப் போகும். இவனுக்கு ஆச்சரியமாயிருக்கும். தன்னையே முழுமையாய் இவனிடம் அர்ப்பணித்திருக்கும் அவள், எப்படி முற்றிலும் மாறான, அறிமுகமில்லை என்பதான ஒரு தோரணையை மேற்கொள்ள முடியும்? ஒருமுறை அவளிடம் 90