பக்கம்:சுயம்வரம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எத்தனை இன்பம், எத்தனை துன்பம்,

இந்தக் காதலிலே?...

13

ப்பாடா இப்போதுதான் என் மனசு குளிர்ந்தது”'

மாதவனின் மார்பில் மதனா தன் முகத்தைப் புதைத்துக் கொண்டதும் இப்படிச் சொன்னவள் வேறு யாருமல்ல; அருணாதான்

காரியம் மிஞ்சிப் போன பிறகு, இப்படிச் சொல்வதைத் தவிர அவளுக்கு வேறு வழி?...

ஆனால் உண்மையிலேயே அவள் மனசு குளிர்ந்ததா என்றால், அதுதான் இல்லை. கலியாணத்துக்கு முன்னால் மட்டுமல்ல; பின்னாலும் யாரைநிமிஷத்துக்கு நிமிஷம் நெருங்க விடக் கூடாது என்று அவள் பகீரதப் பிரயத்தனம் செய்து வந்தாளோ, அதற்காகத் தனக்கு உள்ளுறப் பிடிக்காத அந்த ஆனந்தனுடன்கூட அவள் உறவு கொண்டாடி வந்தாளோ, அவர்கள் தனக்கு எதிர்த்தாற்போலேயே இப்போது நெருங்கி நிற்பதென்றால்?...

சகிக்கவில்லை அவளுக்கு; ஆனாலும் அதை அப்போது வெளியே காட்டிக்கொள்ள முடியுமா? வராத புன்னகையை வரவழைத்துக்கொண்டு மெல்ல அவர்களை நெருங்கினாள். சிரித்துக்கொண்டே ஒருவர் பிடியிலிருந்து ஒருவரைத் தன் கையாலேயே வருவது வரட்டும் என்று பிரித்து நிறுத்திவிட்டு, “பட்டப் பகல், நட்ட நடுத் தெரு, என்னதான் இருந்தாலும் இதுகூடவா தெரியவில்லை?” என்று 'அம்மாமி பாணி'யில் அவர்களைச் செல்லமாகக் கடிந்துகொண்டாள்.

அதை உண்மையென்று நம்பி வெட்கத்தால் முகம் சிவந்துபோன மதனா, “அதென்னவோ தெரியவில்லை; இன்று இவரைக் கண்டதும் என்னை நானே மறந்து விட்டேன்'”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/100&oldid=1385018" இலிருந்து மீள்விக்கப்பட்டது