பக்கம்:சுயம்வரம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

சுயம்வரம்

 என்றாள், தரையைத் தன் கால் கட்டை விரலால் கீறிக் கொண்டே.

“உன்னை மறந்தாலும் உலகத்தை மறந்துவிடாதேடி யம்மா, அது பார்த்ததும் பார்க்காததுமாக ஆயிரம் சொல்லும்!” என்றாள் அருணா, செயற்கரிய காரியத்தைச் செய்துவிட்ட பெருமிதத்தைத் தனக்குள் அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு.

"நாங்கள் மறந்தாலும் நீயாவது மறக்காமல் இருந்தாயே, அதைச் சொல்லு!" என்றான் மாதவன், அவள் முதுகில் ஒரு '‘ கொடுக்காத குறையாக’.

“உங்களுக்கென்ன, சொல்லாமல் என்ன இருந்தாலும் நீங்கள் ஆண் பிள்ளை, எதை எங்கே வேண்டுமானாலும் செய்யலாம்; ஏதும் அறியாத பூனை போலும் இருக்கலாம்!” என்றாள் மதனாவை அப்போதும் மறக்காமல் தனக்குப் பின்னால் தள்ளி நிறுத்திக்கொண்டே.

'“அதெல்லாம் அந்தக் காலம்; இந்தக் காலத்தில்தான் பெண்களிலும் பலர் அப்படி இருக்கிறார்களே!”'என்றான் மாதவன், அவளைச் சுட்டாமல் சுட்டி.

அருணாவுக்குச் சுருக்கென்றது; அவள் உடனே அந்தப் பேச்சை மாற்ற விரும்பி, '“என்ன இருந்தாலும் உங்களைப் போல யாரும் இருக்க மாட்டார்கள்!'” என்றாள் அவனைப் பார்க்காமல் பார்த்து.

“எதற்காக அப்படிச் சொல்கிறாய்?"

'“உங்களைப் பிரிந்து துடிக்கும் ஒரு பெண்ணுக்காக உங்களை நான் இங்கே வரவழைக்க எவ்வளவு பெரிய பொய் சொல்ல வேண்டியிருந்தது!’” என்றாள் அவள், அதுதான் சமயமென்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/101&oldid=1384715" இலிருந்து மீள்விக்கப்பட்டது