பக்கம்:சுயம்வரம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

சுயம்வரம்



“எது?”

கணவன் தலையிலே மனைவி கல்லைத் தூக்கிப் போடுவதுதான்!”

'“விளையாடாதீர்கள்; எனக்குக் கெட்ட கோபம் வரும்.”

'“வந்தால் என்ன? 'ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கொண்டே இரு; கோபம் வந்த சுவடு தெரியாமல் போய்விடுமாம்”!

'“இப்படித்தான் நீங்கள் பேசிக்கொண்டே இருக்கப் போகிறீர்களா”?

'“இல்லை; இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கிருந்து போகப் போகிறேன், மாமாவை ஊருக்கு அனுப்ப ” '“போனால் என்ன நடக்கும், தெரியுமா”?

“'தெரியுமே, அருணாவை அலுவலகத்துக்கு அனுப்பி விட்டு, நீ உள்ளே போய்ப் படுத்துக்கொண்டு விடுவாய்! ” '“அதுதான் இல்லை; நானும் உங்கள் மாமாவிடம் வந்து, 'நான்தான் உங்கள் மனைவி; நீங்கள்தான் என் கணவர் என்று சொல்லப் போகிறேன்!”

'“அந்தக் காரியத்தை மட்டும் இப்போது செய்துவிடாதே, அதனால் ஒரு பெண்ணின் எண்ணத்தில் மண்ணைப் போட்ட பாவம் உன்னை வந்து சேரும்.'”

'“எந்தப் பெண் அவள்?”

“என் மாமாவின் பெண் நீலாவைத்தான் சொல்கிறேன்!”

"அந்த அசட்டுப் பெண்மீது வேறு இப்போது ஆசை வந்துவிட்டதா, உங்களுக்கு?"

'“ஆசை வரவில்லை; அவளிடம் எனக்கு எப்போதுமே ஒரு அனுதாபம் உண்டு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/103&oldid=1384733" இலிருந்து மீள்விக்கப்பட்டது