பக்கம்:சுயம்வரம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

சுயம்வரம்



வழியில்...

அவனுக்காகவே காத்திருந்தது போல் அவனைக் கண்டதும் எங்கிருந்தோ வந்த நீலா, "எனக்குத் தெரிந்து போச்சு, எல்லாம் தெரிஞ்சு போச்சு' என்று சொல்லிக்கொண்டே, கையில் ஒரு கடிதத்துடன் அவனைச் சுற்றிச் சுற்றி வந்து வட்டமடித்தாள்.

உலகம் பல விதம்; காதல் எத்தனை விதம்?..

.

1 4

ட அசடே! நீ எங்கே வந்தாய், எப்படி வந்தாய்? என்ன தெரிஞ்சு போச்சு, உனக்கு? என்ன கடிதம் அது? என்னைச் சுற்றிச் சுற்றி வராதே நில்; நின்று சொல்' என்று மாதவனும் வேறு வழியின்றி நீலாவை ஒரு முறை சுற்றி வந்து கேட்டான். 'நான் ஒன்றும் அசடு இல்லை, சமர்த்துத்தான்!”" என்றாள் அவள், அவன் எதிர்பாராத விதமாக நிமிர்ந்து நின்று.

அவளை ஒரு கணம் வியப்புடன் பார்த்துவிட்டு, “சரி, நீ சமர்த்துத்தான். எங்கே வந்தாய்? எப்படி வந்தாய்? அதைச் சொல், முதலில்!” என்றான் அவன் மீண்டும்.

"எப்படி வந்தேனா காலை சினிமாவுக்கு நீங்கள் போவதாகவும், 'நீ மட்டும் வருவதாயிருந்தால் உன்னையும் அழைத்துக் கொண்டு போகிறேன்!” என்று நீங்கள் என்னிடம் ரகசியமாகச் சொன்னதாகவும் அம்மாவிடம் ஒரு பொய் சொன்னேன். அவள் அதை அப்படியே நம்பி என்னை அவசர அவசரமாக அலங்காரம் செய்துவிட்டு, 'என் கண்ணில்லே, சமர்த்தாப் போய் வா என்றாள்; நானும் சமர்த்தா உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பின்னாலேயே வந்துவிட்டேன்'

'அடி என் சமர்த்தே, ஏன் வந்தாய்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/107&oldid=1384894" இலிருந்து மீள்விக்கப்பட்டது