பக்கம்:சுயம்வரம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

11


வேண்டும்; அவர்கள் 'மார்வலஸ்' என்றால், நீயும் மார்வலஸ்' என்று மலைக்க வேண்டும்...'

"அது எப்படி முடியும்? படத்தில் இங்கிலீஷ்காரர்கள் பேசும் இங்கிலீஷ், அதை விழுந்து விழுந்து படித்தவர்களுக்கே அவ்வளவு சரியாகப் புரியாது என்பார்களே!'

“மற்றவர்களுக்கு மட்டும் அப்படியே புரிந்துவிடுகிறதா, என்ன?”

“புரியாமலா அப்படியெல்லாம் சொல்லி அவர்கள் அனுபவிக்கிறார்கள்?”

“ஆமாம் அசடே, ஆமாம்; அதுதான் இன்றைய நாகரிகம். இல்லாவிட்டால் உனக்கு ஒன்றும் தெரியாது’ என்று அவர்கள் உன்னைப் பற்றி நினைத்துவிடுவார்கள்'”

“நினைக்கட்டுமே, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று நான் நினைத்துவிட்டுப் போகிறேன்!”

“அப்படி நினைத்தால் உன்னையும் 'நாலும் தெரிந்தவள் என்று இன்றைய நாகரிக உலகம் ஏற்றுக்கொள்ளாதே ”

“ஏற்றுக் கொள்ளாவிட்டால் போகட்டும்; அந்த போலி நாகரிகமும் எனக்கு வேண்டாம்; போலிக் கெளரவமும் எனக்கு வேண்டாம்!'”

'“பின்னே, புதுமை இப்போது எதில் இருக்கிறது என்கிறாய்? அதில்தான் இருக்கிறது. உண்ணும் உணவில் போலி; உடுத்தும் உடையில் போலி, அணியும் நகையில் போலி, பேசும் பேச்சில் போலி; சிரிக்கும் சிரிப்பில் போலி; ஆனானப்பட்ட இதயத்தைக்கூட இப்போது போலி இதயமாக்கச் சில டாக்டர்கள் முயன்றுகொண்டிருக்கிறார்களே, அது தெரியாதா உனக்கு '”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/114&oldid=1384858" இலிருந்து மீள்விக்கப்பட்டது