பக்கம்:சுயம்வரம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

சுயம்வரம்



"ஆமாம், நீங்கள் தமிழ்ப் படத்துக்கே போவதில்லையா?" என்றாள் அவள்.

'போவதுண்டு; ஆனால் வெளியே சொல்வதில்லை!" என்றான் அவன்.

"ஏனாம்?"

'சொன்னால் இந்தக் காலத்து நண்பர்கள் என்னை மதிக்க மாட்டார்கள்!'

'ஏன், அவர்கள் போவதில்லையா?" 'போவார்கள்; ஆனால் அவர்களும் அதை வெளியே சொல்லிக்கொள்ள மாட்டார்கள்!”

'நன்றாயிருக்கிறது! இது ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்வதுபோல் இல்லையா?"

'தெரிந்துதானே ஏமாற்றிக்கொள்கிறோம்? தெரியாமல் ஏமாற்றிக்கொள்ளவில்லையே!” என்றான் அவன் சிரித்துக் கொண்டே.

'ஏன், தமிழ்ப் படங்கள் அத்தனை மோசமாகவா இருக்கின்றன?”

"ஆமாம். அந்தப் படங்களின் முதல் மோசம், முத்தக் காட்சிகள் இல்லாமல் இருப்பது; இரண்டாவது மோசம்...'

"என்ன, என்ன காட்சிகள் என்று சொன்னீர்கள்?" 'முத்தக் காட்சிகள்!” 'ஐயையே அதைச் சொல்லவே வெட்கமாயில்லை, உங்களுக்கு?"

'கொடுப்பவர்களுக்கே வெட்கமில்லாதபோது சொல்பவர்களுக்கு ஏன் இருக்க வேண்டுமாம்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/117&oldid=1384821" இலிருந்து மீள்விக்கப்பட்டது