பக்கம்:சுயம்வரம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

115



'அப்படியானால் இப்போது நாம் பார்க்கப்போகும் படத்தில்கூட அந்தக் காட்சிகளெல்லாம் உண்டா?

'“உண்டு; நிறைய உண்டு. படத்தின் பெயரே 'மறக்க முடியாத முத்த'மாச்சே' ” “நாசமாய்ப் போச்சு எதற்கோ வந்த என்னை, எதற்கோ இங்கே அழைத்துக்கொண்டு வந்து... ” '“கவலைப்படாதே! அதெல்லாம் நிஜ முத்தங்கள் இல்லை, நடிப்புக்காகக் கொடுக்கப்படும் முத்தங்கள்' ” “என்னதான் நடிப்பு என்றாலும் அதற்கும் ஒரு வரைமுறை இருக்க வேண்டாமா?"

‘'வேண்டாம். நடிகர்கள், நடிகர்கள் அல்லாதவர்கள் என்று இன்றைய உலகத்தில் யாரும் இல்லை. ஏனெனில், இப்போது எல்லாருமே நடிகர்களாகத்தான் இருக்கிறார்கள். படத்தில் என்ன, வீட்டில் கணவன் மனைவியைத் தழுவி முத்தமிடுகிறான்; அவன் வெளியே போனபின் பார்த்தால் மனைவியின் கை வளையல்கள் காணாமற் போய்விடுகின்றன. மனைவி கணவனைத் தழுவி முத்தமிடுகிறாள்; அவள் வெளியே போன பின் பார்த்தால் கணவனின் 'மணிபர்ஸ் காணாமற் போய் விடுகிறது. இதெல்லாம் இன்றைய நாகரிக உலகத்தில் சகஜம்!”

"ஆமாம், இவர்களே இப்படிச் செய்துவிட்டுப் பழியை யார் தலையில் போடுவார்கள்?"

'“வீட்டில் உள்ள வேலைக்காரர்கள் தலையிலோ, வேண்டாத விருந்தினர்கள் தலையிலோ போடுவார்கள். அதற்காக அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றவும்” செய்வார்கள்!"

'போலீஸாரிடம் புகார் செய்யமாட்டார்களா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/118&oldid=1384812" இலிருந்து மீள்விக்கப்பட்டது