பக்கம்:சுயம்வரம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

சுயம்வரம்



'“கணவன் என்று சொல்லிக்கொள்பவரும், மனைவி என்று சொல்லிக்கொள்பவரும் ஒருவருக்கொருவர் திருடிக் கொள்ளாமல் இருந்தால் செய்வார்கள்; இல்லாவிட்டால், ஸில்லி, இதற்கெல்லாம் போய்ப் போலீஸிலாவது, புகார் செய்வதாவது நம்மைப் பற்றி, நம்முடைய அந்தஸ்தைப் பற்றிப் பிறர் என்ன நினைப்பார்கள்?' என்று சொல்லித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்வார்கள்!”

'“இதுவா நாகரிகம்?”

"ஆமாம்; இந்த நாகரிகத்துக்குப் பலியாகி, இவர்களைப் போல் தாங்களும் பெரிய மனிதர்கள் வேடம் போட வேண்டும், இவர்களைப் போல் தாங்களும் ஓரிரு நாட்களாவது ஆடம்பரமாக வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஆசையின் காரணமாகவே சில சமயம் இவர்கள் வீட்டு வேலைக்காரர்களும், வேண்டாத விருந்தினர்களும் உண்மையாகவே இவர்களுடைய வீட்டில் திருடிவிட்டு அரசாங்க விருந்தாளிகளாகிவிடுகிறார்கள்!"

“'பாவம், பாழும் நாகரிகத்துக்கு இவர்கள் பலியாவது போதாதென்று வேலைக்காரர்களையும், வீட்டுக்கு வரும் விருந்தாளிகளையுமல்லவா பலியாக்கி விடுகிறார்கள்? வாழ்க்கையில் இதெல்லாம் மறைந்து என்றுதான் உண்மைக்கு இடம் கிடைக்கப் போகிறதோ, தெரியவில்லை! என்றாள் அவள். ” “எங்கே கிடைக்கப் போகிறது? அதை இந்த உலகத்துக்கு உணர்த்த வந்த ஒரே ஒரு அரிச்சந்திரனுக்குக்கூட அன்றிருந்து இன்று வரை நாடகத்திலும் சினிமாவிலும் தானே இடம் கிடைக்கிறது? வாழ்க்கையில் கிடைக்கவில்லையே' என்றான் அவன். ” அப்போது ஏதோ ஒரு 'கட் - பாடி தனியாக வந்து அவர்களுக்கு முன்னாலிருந்த 'சீட்டில் உட்கார, அவளுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/119&oldid=1384799" இலிருந்து மீள்விக்கப்பட்டது