பக்கம்:சுயம்வரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுயம்வரம்


எங்களுக்கு நாங்களே நிச்சயித்த
வண்ணம் நடந்த திருமணத்திற்கு...

1


காலைச் சாப்பாடு முடிந்து, சிற்றுண்டி வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றதன் அறிகுறியாகவோ என்னவோ, சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி, அன்றைய நாளிதழைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் சம்பந்தம்.

கீழே உட்கார்ந்து ஏதோ ஒரு வாரப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்த அவருடைய ‘பட்ட மகிஷி’ சாரதாம்பாள், இருந்தாற்போல் இருந்து ‘குபீ’ரென்று சிரித்தாள்.

‘என்ன விஷயம்?’ என்றார் சம்பந்தம். தம் கையிலிருந்த நாளிதழை மடித்துக் கீழே வைத்துவிட்டு.

“இந்த ‘ஜோக்’கைப் பார்த்தீர்களா? யாரோ ஒருத்தி கையில் ஸ்வீட்டுடன் திடீரென்று உள்ளே நுழைந்து பிள்ளையைப் பெற்ற ஒருவரை நெருங்கி, வாயைத் திறங்க; ஸ்வீட் போடறேன் என்றாளாம்; ‘யாரம்மா, நீ? எதற்காக என் வாயில் ஸ்வீட் போடப் போகிறாய்?’ என்று அவர் ஒன்றும் புரியாமல் கேட்டாராம்; நான்தான் உங்கள் மருமகள்; எனக்கும் உங்கள் பிள்ளைக்கும் நேற்றுத்தான் ரிஜிஸ்தர் ஆபீசில் கலியாணம் நடந்தது. அவர் வெட்கப் பட்டுக்கொண்டு வெளியே நிற்கிறார் என்றாளாம் அவள்” என்று, தான் படித்துச் சிரித்த ஜோக்கை அவருக்குச் சுட்டிக் காட்டினாள் அவள்.

“நடக்கும், நடக்கும்; இந்தக் காலத்தில் எதுதான் நடக்காது? எல்லாம் நடக்கும்” என்று சொல்லி அவர் வாயை மூடுவதற்குள், அவருடைய ஒரே மகனான மாதவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/12&oldid=1384581" இலிருந்து மீள்விக்கப்பட்டது