பக்கம்:சுயம்வரம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

119


அவளுக்குத் தோன்றிற்று. 'இதுவா மேல் நாட்டுக் கலை, இதுவா மேல் நாட்டு நாகரிகம்?' என்பது போல் அவள் மூக்கின் மேல் விரலை வைத்தாள். அந்த விரலை மாதவன் மென்னகையுடன் எடுத்து அவளுடைய மடியின்மேல் விட்ட போது, அவள் மெல்லச் சிரித்தாள்; அவனும் மெல்லச் சிரித்தான்.

இடையில் வந்த 'ஆடை களைந்து ஆடும் நடனம்' ஒன்று அங்கே வந்திருந்தவர்களின் கவனத்தை மட்டுமல்ல, கண்ணையும் வெகுவாகக் கவர்ந்தது. படத்தின் கதாநாயகி ஆடிக்கொண்டே ஒவ்வொரு ஆடையாகக் களைந்து எறிந்த போது, எல்லாரும் அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். நீலாவுக்கோ, கடைசியாக எஞ்சியிருந்த அந்த ஒரே ஒரு 'அண்டர் வே'ரையும் அவள் எங்கே அவிழ்த்துப் போட்டுவிடுவாளோ என்ற அச்சம்; தன்னையும் அறியாமல் மாதவனைச் சீண்டி, வீட்டுக்குப் போய் விடுவோமா?" என்றாள் அவள்.

"இதற்குள் வீட்டுக்குள் போனால் உன் அம்மாவிடம் நீ ' சினிமாவுக்குப் போகிறோம்' என்று சொல்லிவிட்டு வந்த பொய் என்ன ஆவது?" என்றான் அவன்.

"அது வேறே இருக்கிறதா? கண்ணை வேண்டுமானால் மூடிக்கொள்ளட்டுமா?"

"வேண்டாம்; நீ எதிர்பார்க்கும் கட்டத்துக்கு அவள் போக இந்தியாவில் அவளை விட்டிருக்க மாட்டார்கள்!" என்றான் அவன்.

"அப்படியென்றால்..."

"அந்தப் பகுதி ஏற்கெனவே வெட்டப்பட்டிருக்கும்!"

அதற்குள் அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒருவர், "ஸ், சைலன்ஸ்!" என்று இரைய, அவருக்கு அடுத்தாற்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/122&oldid=1384961" இலிருந்து மீள்விக்கப்பட்டது