பக்கம்:சுயம்வரம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

சுயம்வரம்


நினைவிலும் கனவிலும் இதுவரை உங்களோடு வாழ்ந்துவிட்ட என்னால் இனி இன்னொருவருடன் எப்படி வாழமுடியும்?" என்று அவள் பேச்சுவாக்கில் கேட்டபோது, அவனால் ஏனோ அதற்குப் பதில் சொல்லவே முடியவில்லை.

ஆனால், அடிக்கடி நினைத்துக்கொள்ளும் அந்த ஒன்றை மட்டும் அவன் அப்போதும் நினைத்துக்கொண்டான். அதுதான் இது:

"இந்த உலகத்தில் 'நல்லவ'னாக வாழ்வதுதான் எவ்வளவு கடினமானது!"

அதற்காகவே சிலர் 'வல்லவ'னாக வாழ வேண்டுமென்று சொல்கிறார்கள்; அப்படியே வாழ்ந்தும் காட்டுகிறார்கள்.

ஆனால், அவர்களை நெருங்கிப் பார்த்தால்?....

கையிலிருக்கும் ஜபமாலை மட்டுமா கண்ணுக்குத் தெரிகிறது? கக்கத்தில் மறைத்து வைத்திருக்கும் கன்னக் கோலும் தெரிந்து தொலைகிறதே!

அத்தகைய வல்லவனாக வாழமுடியுமா, தன்னால்?...

முடியாத காரியம்; முடியவே முடியாத காரியம்!

இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டே நீலாவுடன் வந்துகொண்டிருந்த மாதவன் பஸ் ஸ்டாண்டை அடைந்த போது பகல் மணி பன்னிரண்டுக்கு மேல் இருக்கும். அப்போதும் ஸ்டாண்டில் கூட்டம் இல்லாமல் இல்லை; இருக்கத்தான் இருந்தது. ஆனால் அவர்களை வரிசைப்படுத்தி, 'க்யூ'வில் நிற்க வைக்கத்தான் அந்த நேரத்தில் ஆள் இல்லை; அதாவது, கண்டக்டர் இல்லை.

அதன் காரணமாக அங்கு வந்து நின்ற பஸ்களில் அடித்துப் பிடித்து ஏறிக் கொண்டிருந்தவர்களைக் கண்ட ஒருவர், "கண்டக்டர் இல்லாவிட்டால் என்ன? பஸ் வந்து நின்றதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/125&oldid=1384971" இலிருந்து மீள்விக்கப்பட்டது