பக்கம்:சுயம்வரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

சுயம்வரம்

யாரோ ஒரு பெண்ணுடன் மாலையும் கழுத்துமாக வந்து அவர் காலடியில் விழுந்து, “இன்று காலையில்தான் நாங்கள் திருநீர்மலையில் கலியாணம் செய்துகொண்டோம், அப்பா எங்களை ஆசீர்வதியுங்கள்!” என்றான் சிரம் தாழ்த்தி.

அவரோ ஆசீர்வதிப்பதற்குப் பதிலாகச் சாபம் கொடுப்பவர்போல் துள்ளி எழுந்து, “என்ன துணிச்சலடா, உனக்கு? யார் இவள்?” என்று கத்தினார்.

“ஏற்கெனவே நான் சொன்ன அதே மதனாதான் அப்பா, இவள்! ‘டெலிபோன் ஆபரேட்ட’ராக வேலை பார்க்கிறாள்!” என்றான் மாதவன்.

“ஒகோ இனி உனக்கு அப்பாவும் வேண்டாம், அம்மாவும் வேண்டாம் - மதனா இருந்தால் போதும்; அப்படித்தானே?”

“போதாது, அப்பா கணவனும் மனைவியும் வேலை பார்க்கும் ஒரு குடும்பத்தில் உங்களைப்போல் ஒரு வேலையும் இல்லாத பெரியவர்களும் உடன் இருப்பதுதான் நல்லது!”

“ஏன், வீட்டைக் காக்கும் நாயாக இருக்கவா? இல்லை, கூர்க்காவாக இருக்கவா?”

“இரண்டில் எதுவாகவும் இருக்க வேண்டாம், நீங்கள் ஏற்கெனவே இருந்ததுபோல் எனக்கு அப்பா - அம்மாவாகவும், என்னைக் காதலித்து, கலியாணமும் செய்து கொண்டு, எனக்கு இல்லத்தரசியாகவும், உங்களுக்கு ‘இனிய மருமக’ளாகவும் வந்திருக்கும் இவளுக்கு நீங்கள் மாமனார் - மாமியாராகவும் இருந்தால் போதும்!” என்றான் பையன் படுசமர்த்துடன்.

இதைக் கேட்டதுதான் தாமதம்; “இருப்பேன்டா, இருப்பேன் இன்றைக்கு அடுப்படி ஆளாயிருந்து, நாளைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/13&oldid=1384779" இலிருந்து மீள்விக்கப்பட்டது