பக்கம்:சுயம்வரம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

சுயம்வரம்

"அவ்வளவு மரியாதைக்குரியவர் வீட்டில் அவள் சாவதற்கு என்ன இருக்கிறது?"

"எல்லாம் இருக்கிறது! பகலில் அது போலீசாரின் மரியாதைக்குரிய வீடாயிருந்தாலும், இரவில் அது அவர்களில் சிலருக்குப் பிடிக்காத வீடாயிருக்கும்!"

"கொஞ்சம் புரியும்படியாகத்தான் சொல்லுங்களே?"

"சொல்கிறேன்: வாழ்க்கையை உள்ளது உள்ளபடி அனுபவிக்க விரும்பும் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு அது ஒரு சொர்க்கம்; சுருக்கமாகச் சொல்லப் போனால் ஏ ஒன் நைட் கிளப்!"

"நைட் கிளப்பா?"

"ஆமாம், பம்பாய் போன்ற நகரங்களில் அது பகிரங்கமாகவே நடைபெறுகிறது; சென்னையைப் போன்ற துரதிர்ஷ்டம் பிடித்த நகரங்களில்தான் அது கொஞ்சம் இலைமறை காயாக இயங்கவேண்டியிருக்கிறது!"

"ஏன்?"

"இங்குள்ள சட்டதிட்டங்கள் அப்படி! எதையும் பகிரங்கமாகச் செய்ய இங்குள்ளவர்கள் எங்களைப் போன்றவர்களை அனுமதிப்பதில்லை; 'அழகிகள் வேண்டுமா? அக்கம் பக்கம் பார்த்துப் பிடி! ஆண் - பெண் உறவைப் பற்றிய படங்களா? ஆபத்தில்லாத நண்பர்களுடன் சேர்ந்து பார்!' என்கிறார்கள்!"

"அப்படியாவது ஒழுக்கத்தைக் காப்பாற்ற முடியுமா என்று இங்குள்ளவர்கள் பார்க்கிறார்கள்; அதில் என்ன தவறு?"

"ஒன்றா, இரண்டா? ஓராயிரம் தவறுகள்! அவற்றைப் பற்றியெல்லாம் இங்கே விரிவாகச் சொல்லிக்கொண்டிருக்க இப்போது எனக்கு நேரம் இல்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால், இயற்கையே மனிதனை ஒரு குறிப்பிட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/143&oldid=1384873" இலிருந்து மீள்விக்கப்பட்டது