பக்கம்:சுயம்வரம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

சுயம்வரம்


அதிகாரிகளாக, அதிபர்களாக, படித்தவர்களாக, பண்பின் பாதுகாவலர்களாக இருந்தார்கள்!

அவர்களில் சிலர் வெளியே அறம் வளர்ப்பவர்கள்; ஆலயத் திருப்பணி செய்பவர்கள்; 'அன்பர் பணி செய்யவெனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே!' என்று பாடும் வாய் தேனூறப் பராபரத்தை வேண்டுபவர்கள்!

'உண்மையான உலகம் எங்கே இருக்கிறது? அது வெளிச்சத்தில் இல்லை; இருட்டில்தான் இருக்கிறது!' என்பதை மாதவன் அன்றுதான் முதன்முறையாகக் கண்டான். கண்டதும், "இம்மாதிரி இடங்களைப் பற்றித்தான் 'இருட்டறையில் உள்ளதடா உலகம்' என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடினாரோ?” என்று நினைத்தான்.

அந்த இருட்டுலகில் அவன் கண்கள் மதனாவைத் தேடி அலைந்தபோது, யாரோ ஒருவன் மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கத் தன்னிடம் வசமாக வந்து அகப்பட்டுக் கொண்டுவிட்ட ஒரு பெண்ணைப் பலவந்தப்படுத்துவது போலவும், அவள் "விடுடா நாயே, என்னை விடுடா!" என்று அவன் பிடியிலிருந்து திமிறிக் கைக்குக் கிடைத்ததை எடுத்து அவனை மொத்துவது போலவுமான ஒலிகள் அவன் காதில் விழுந்தன; அந்த ஒலிகளை நெஞ்சம் பதற, நினைவு தடுமாற அவன் உற்றுக் கேட்டான். சந்தேகமேயில்லை; அது மதனாவின் குரல்தான்! அவளைப் பலவந்தப்படுத்துபவன் யாராயிருக்கும்? - ஒருவேளை ஆனந்தனாயிருக்குமோ?...

இருக்காது; அவனுக்கு ஏது அவ்வளவு தைரியம்?

அந்த ஒலிகளுக்கிடையே யாரோ ஒருத்தி சிரிக்கும் ஒலிகூடக் கேட்கிறதே, அது யாருடைய சிரிப்பொலியாயிருக்கும்? - அருணாவின் சிரிப்பொலியாயிருக்குமோ?...

தேடி சிவாங்கத் தன் பெண்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/151&oldid=1384892" இலிருந்து மீள்விக்கப்பட்டது