பக்கம்:சுயம்வரம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

சுயம்வரம்


நின்று விழிக்க, அவர்களைத் தொடர்ந்து வந்த மதனா, ஓடோடிச் சென்று மாதவனைக் கட்டித் தழுவிக்கொண்டு, "வந்து விட்டீர்களா? இந்தக் கடைசி நிமிஷத்திலாவது என்னைக் காப்பாற்ற வந்து விட்டீர்களா?" என்று படபடத்தாள்!

அவளை ஓர் உதறு உதறித் தள்ளிவிட்டு, "உன்னை யார் இந்த அருணாவுடன் இந்த நேரத்தில் இங்கே வரச் சொன்னது?" என்று உறுமினான் மாதவன்.

"அருணா இங்கே வரப்போவதாக எங்கே சொன்னாள்? எங்கேயோ, யாருக்கோ நடந்த கலியாணத்திற்கு ரிசப்ஷன் இங்கே என்று சொல்லியல்லவா அவள் என்னை இந்த 'நரக'த்துக்கு அழைத்துக்கொண்டு வந்தாள்?" என்றாள் மதனா.

மாதவன் நகைத்தான்; நகைத்துவிட்டுச் சொன்னான்:

"என்னை அடைய முடியாவிட்டாலும் என் நினைவிலேயே காலமெல்லாம் வாழ்ந்துவிட முடிவு செய்திருந்தவளல்லவா அருணா! அவளால் இதைத் தவிர வேறு என்ன செய்திருக்க முடியும்?"

அருணா திகைத்தாள்; திகைத்துவிட்டுச் சொன்னாள்:

"என்னை மன்னியுங்கள்; இதைக்கூட நான் உங்களை அடைவதற்காகத்தான் செய்தேன்!"

இப்படிச் சொன்னவள் சொன்னதோடு நிற்கவில்லை; ஓடி வந்து அவன் கால்கள் இரண்டையும் தன் கைகளால் பற்றிக் கண்ணீரால் அவற்றை நனைத்தாள்.

"விடு காலை, இனி என் முகத்தில் கூட விழிக்காதே!" என்று அவள் பிடியிலிருந்து தன் கால்களை விடுவித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/153&oldid=1384898" இலிருந்து மீள்விக்கப்பட்டது