பக்கம்:சுயம்வரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



விந்தன்

13

சத்தம் கேட்டது. “இது என்ன கரடி, பூஜை வேளையில்?” என்று முணுமுணுத்துக் கொண்டே சென்று கதவைத் திறந்தான் கதாநாயகன்.

“என்ன மாப்பிள்ளை, அப்படிப் பார்க்கிறீங்க? என்னைத் தெரியவில்லை, உங்களுக்கு? ‘டிசம்பர் சீசனு’க்காக வந்திருக்கிறேன்!” என்று சொல்லிக்கொண்டே அவன் மாமா மகாலிங்கம் குடும்ப சமேதராக உள்ளே நுழைந்தார்.

இந்த எதிர்பாராத அதிர்ச்சியால் தாக்குண்ட கதாநாயகி, பாலை அடுப்பிலேயே விட்டுவிட்டுப் பறந்து போய்ப் படுக்கையறைக்குள் நுழைந்து, கதவைப் ‘படா’ரென்று சாத்தி உள்ளே தாழிட்டுக் கொண்டாள்

காதலாம் காதல், ஒருவனை ஒருத்தி
காதலிப்பது என்ன காதல்?...

2



டிசம்பர் சீசன் ஜிந்தாபாத்”!

“மாமா மகாலிங்கம் ஜிந்தாபாத்”

யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு மாதவன் வயிற்றெரிச்சலோடு வந்து கதவைத் திறந்து மூடியதுதான் தாமதம், அதுவரை இருட்டில் தலை மறைவாக நின்று, அங்கே நிகழ்ந்தனவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஆனந்தன், தன்னை மீறிய உற்சாகத்தில் டிசம்பர் சீசனுக்கும், அந்த சீசனுக்குக் குடும்ப சமேதராக வருகை தந்திருந்ததோடு, தக்க சமயத்தில் மாதவன் வீட்டுக்கு வந்து தன் வயிற்றில் பாலையும் வார்த்த அவன் மாமா மகாலிங்கத்துக்கும் இந்தியில் வாழ்த்துக் கூறிக்கொண்டே திரும்பினான்.

அப்போது யாரோ ஒருவர் இரு கைகளை மட்டும் ‘பட், பட்’ என்று தட்டி, தன் வாழ்த்தொலிக்கு வரவேற்பு கொடுக்கும் கையொலி அவன் காதில் விழவே, “யார் அது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/16&oldid=1384841" இலிருந்து மீள்விக்கப்பட்டது