பக்கம்:சுயம்வரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

15

இவர்கள் இருவரும் ‘இரு கண்களை’யும் வைக்காததால் தானோ என்னவோ, காதலில் வெற்றி பெறவில்லை. அதற்காக, ‘சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்!” என்று சொல்லித் தன்னைச் சமாளித்துக் கொண்ட நரியைப் பின்பற்றவும் இவர்கள் விரும்பவில்லை. மாறாக, ‘கலியாணமானாலும், காதலிக்காமல் விடமாட்டேன்!’ என்று அருணா ஒற்றைக் காலில் நின்றாள்; அதே மாதிரி ஆனந்தனும் நின்றான். இருவரும் ஒருவரையொருவர் அறியாமல் இப்படி நின்றதன் பலன்தான், இருட்டிலே ஒருவரையொருவர் இனம் கண்டுகொண்டு இளித்தது!

இளித்து முடிந்ததும், “நான்தான் பழிக்குப் பழி வாங்குவதற்காக இங்கே பழியாய்க் கிடக்கிறேன். நீங்கள்...” என்று ஆரம்பித்தான் ஆனந்தன்.

“நானும் பழிக்குப் பழி வாங்குவதற்காகத்தான் இங்கே பழியாய்க் கிடக்கிறேன்!” என்றாள் அருணா.

“அப்படியானால்...”

“நானும் மாதவனால் காதலிக்கப்பட்டுக் கைவிடப் பட்டவர்களிலே ஒருத்தி.”

“அப்படி எத்தனை பேரைக் காதலித்திருப்பான் அவன்?”

“யாருக்குத் தெரியும், இந்தக் கால்த்து ஆண்கள்தான் இருப்பது இரண்டே கண்களாயிருந்தாலும் அவற்றை இருபதாயிரம் பெண்கள்மீது வைக்கிறார்களே!”

“அப்கோர்ஸ், அது உண்மையாயிருக்கலாம். ஆனால் அதற்கு நான் விதி விலக்கு. மதனாவைத் தவிர இதுவரை நான் வேறு யாரையும் மனத்தால்கூட நினைத்ததில்லை!”

“நானும் அப்படித்தான்; மாதவனைத் தவிர இதுவரை வேறு யாரையும் மனத்தால்கூட நினைத்ததில்லை!”

இதைச் சொல்லும்போது அவள் ‘விசுக்’கென்று விம்மவே, “டோன்ட் வொர்ரி, நீங்கள் யாரைக் காதலித்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/18&oldid=1384869" இலிருந்து மீள்விக்கப்பட்டது