பக்கம்:சுயம்வரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

சுயம்வரம்

கலியாணத்திற்கு முன்னால் உங்கள் கண்ணீர் எந்தக் காரியத்தையும் சாதிக்கப் போவதில்லை. ஏன் அனாவசியமாக அதை வீணாக்குகிறீர்கள்? ஒரு சொட்டைக்கூட வெளியே விடாமல் அப்படியே சேமித்து வையுங்கள்; கலியாணத்துக்குப் பின் பல காரியங்களைச் சாதித்துக் கொள்ள அது உங்களுக்கு உதவும். இந்தாருங்கள் கைக் குட்டை, துடைத்துக் கொள்ளுங்கள்!” என்று தன் கால் சட்டைப் பையில் இருந்த கைக் குட்டையை உருவி அவளிடம் கொடுக்கப் போனான் ஆனந்தன்.

“வேண்டாம்; என்னிடம் கைக் குட்டை இல்லா விட்டாலும் முன்றானை இருக்கிறதே, துடைத்துக் கொள்ள” என்றாள் அவள்.

“அப்கோர்ஸ், இருக்கலாம். ஆனால் அது ‘மினி முன்றானை’யா யிருக்கிறதே!” என்று ஒரு ‘மாக்ஸிமம் சிரிப்பு’ச் சிரித்தான் அவன்.

“பரவாயில்லை; இருட்டில்தானே எடுத்துத் துடைத்துக் கொள்ளப் போகிறேன!” என்றாள் அவளும் ஒரு ‘மாக்ஸிமம் சிரிப்பு’ச் சிரித்து.

“பகலாயிருந்தாலும் எனக்கு முன்னால் நீங்கள் அதைத் தைரியமாக எடுத்துத் துடைக்கலாம்; அதுவரை நீ வேண்டாமென்றாலும் நான் கண்ணை மூடிக்கொண்டு விடுவேன்!”

“அவரும் ஒரு சமயம் அப்படித்தான் கண்ணை மூடிக் கொண்டார்.”

“யார், மாதவனா? கிடக்கிறான், அயோக்கியன்! யோக்கியனாக நடிக்க அதைவிட வேறு ஒன்றும் தோன்றவில்லையாக்கும், அவனுக்கு? நான் வேண்டுமானால் அந்த விஷயத்தில்கூட அவனைப் பின்பற்றாமல் கொஞ்சம் திரும்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/19&oldid=1384875" இலிருந்து மீள்விக்கப்பட்டது