பக்கம்:சுயம்வரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சுயம்வரம்

“பகையாளி குடியை உறவாடிக் கெடு என்பார்களே, அது மாதிரி நானும் அவர்களை உறவாடிக் கெடுக்கப் போகிறேன்.”

“அதற்குத்தான் நீங்கள் இங்கே வந்தீர்களா?”

“ஆமாம்.”

“அட, கடவுளே! நானும் அதற்குத்தான் வந்திருக்கிறேன்!”

“மகிழ்ச்சி, இந்த முயற்சியில் நீங்கள் எனக்குத் துணையாக வந்து சேர்ந்ததற்காக!”

“எனக்கும் மகிழ்ச்சிதான், இந்த முயற்சியில் நீங்கள் எனக்குத் துணையாக வந்து சேர்ந்ததில்!” என்று தன்னை மறந்து அவள் கையைப் பிடித்துக் குலுக்கப் போனான் அவன்.

அவள் கொஞ்சம் பின்வாங்கி நின்று, “மகிழ்ச்சி மனசோடு நிற்கட்டும்; அதற்குள் கைக்கு வந்துவிட வேண்டாம்” என்றாள்.

“வொய், வொய்?” என்றான் அவன் பதட்டத்துடன்.

“அவருடைய கையைத் தவிர வேறு யாருடைய கையும் என் மேல் படுவதை நான் விரும்பவில்லை” என்றாள் அவள்.

“அப்கோர்ஸ், அது இப்போதுதான் எனக்கும் ஞாபகத்துக்கு வருகிறது. நானும் அவளுடைய கையைத் தவிர வேறு யாருடைய கையும் என் மேல் படுவதை விரும்பவில்லை!” என்றான் அவனும் தன்னைச் சமாளித்துக்கொண்டு.

“ஆமாம், அவள் அந்த விரதத்தை மேற்கொள்ளாதபோது நீங்கள் மட்டும் மேற்கொண்டு என்ன பிரயோசனம்?” என்று அவள் கேட்டாள்.

“ஆமாம், அவன் அந்த விரதத்தை மேற்கொள்ளாதபோது நீங்கள் மட்டும் மேற்கொண்டு என்ன பிரயோசனம்?” என்று அவன் அவளைத் திருப்பிக் கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/21&oldid=1384604" இலிருந்து மீள்விக்கப்பட்டது