பக்கம்:சுயம்வரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

சுயம்வரம்

கலியாணத்துக்கு மேல் இன்னொரு கலியாணமும் தேவை என்பதை நாம் உணருகிறோம். அந்தக் கலியாணத்துக்கு...

ஆகா! நமது பெரியவர்கள் எவ்வளவு அழகாக, பொருள் பொதிந்ததாகப் பெயர் வைத்திருக்கிறார்கள், ‘சாந்திக் கலியாணம்’ என்று!

எங்கே சாந்தி?...

கொஞ்சம் யோசித்துப் பார்த்தோமானால், மனிதனுக்கு இரு வகை சாந்திகள் தேவைப்படுவதை நாம் உணரலாம்.

ஒன்று, வாலிபத்தில் தேவைப்படும் சாந்தி; இன்னொன்று, வயோதிகத்தில் தேவைப்படும் சாந்தி.

வயோதிகத்தில் தேவைப்படும் சாந்திக்குப் பெண் வேண்டாம்; அப்படியே தேவைப்பட்டாலும், அவள் வேளைக்கு வேளை வாய்க்கு ருசியாகச் சமைத்துப் போட்டுக் கொண்டு, ஓய்ந்த போதெல்லாம் தொணதொணத்துக் கொண்டிருந்தால் போதும். அப்படி ஒருத்தி இல்லா விட்டாலும் பரவாயில்லை; இருக்கவே இருக்கிறது ராமாயணம், மகாபாரதம், இத்தியாதி, இத்தியாதி...

வாலிபத்தில் தேவைப்படும் சாந்திக்கோ அவசியம் பெண் வேண்டும்; அவள் அழகே உருவாக இருக்க வேண்டும்; வாய்க்கு ருசியாக சமைத்துப் போடத் தெரியா விட்டாலும் வக்கணையாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். ‘பாடு!’ என்றால் பாட வேண்டும்; ‘ஆடு’ என்றால் ஆட வேண்டும். இரண்டும் தெரியாதென்றால், ‘ஏழு குழந்தைகளுக்குத் தந்தையான ஒருவன் எங்கே இருக்கிறான்?’ என்று தேடியலையும் என்றும் பதினாறாய் மின்னி அலுத்துப் போன ஏதாவது ஒரு சினிமா நட்சத்திரத்தின் ‘கிழக்கண் பார்வை’ அவனுக்குக் கிட்ட வேண்டும். அவள்தான் என்ன செய்வாள், பாவம்! உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/25&oldid=1384950" இலிருந்து மீள்விக்கப்பட்டது