பக்கம்:சுயம்வரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

சுயம்வரம்


வேறு கதியில்லை. சமயத்தில் அவனைப் போல் வேறு யார் கைகொடுத்து உதவுகிறார்கள்? அவனுடைய வாக்கைப் போல் வேறு யாருடைய வாக்கு கைகொடுத்து உதவுகிறது? அந்த 'சஞ்சீவிக் கவிஞ'னின் சாகாத வாக்கைத்தான் இப்போது நாமும் பின்பற்ற வேண்டும்; வேறு வழியில்லை.

நீ உள்ளே தாழிட்டுக் கொண்டிருக்கிறாய் அல்லவா? நான் வெளியே ஒரு பூட்டையும் எடுத்துப் போட்டு வைத்திருக்கிறேன். யாருக்காக! பாழும் மாமாவுக்காகத்தான்! அந்த மனிதர் திடீரென்று வந்து கதவைத் தட்டி, 'யார் உள்ளே?' என்று கேட்டுவிடக் கூடாதல்லவா?

அப்படியும் 'ஏன் இந்த அறைக்கு மட்டும் பூட்டுப் போட்டிருக்கிறது?' என்று அந்த விடாக்கண்டர் கேட்டார். 'யாருக்குத் தெரியும், அப்பா எப்பொழுதுமே அந்த அறையை மட்டும் பூட்டுப் போட்டுத்தான் வைத்திருக்கிறார்!' என்று சொல்லிவிட்டேன்.

நல்ல வேளை, அப்பா என்மேல் கோபித்துக் கொண்டு ஊருக்குப் போகாமல் இருந்திருந்தால் நம் கதி என்ன ஆகியிருக்கும்? அவர் வாழ்க, அவருடைய கோபம் வாழ்க!

எது எப்படியிருந்தாலும் பொழுது விடியும் வரை நீ அந்த அறைக்குள்ளேதான் இருக்க வேண்டும்; உன் அப்பா, அம்மாவை மீறி என்னைக் கலியாணம் செய்துகொண்ட 'குற்ற'த்துக்காக நீ அந்தத் 'தண்டனை'யை அனுபவித்தே தீர வேண்டும். பொழுது விடிந்ததும்...

ஆமாம், பொழுது விடிந்ததும் நீ எங்கே போவாய்? உன்னுடைய வீட்டுக்கும் போக முடியாதே!...

என்னைப் பெற்ற புண்ணியாத்மாக்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்; உன்னைப் பெற்ற புண்ணியாத்மாக்களாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/27&oldid=1384913" இலிருந்து மீள்விக்கப்பட்டது