பக்கம்:சுயம்வரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

27


‘ஏன்தான் டிசம்பர் சீசன் என்று ஒன்று இங்கே வருகிறதோ, எதற்குத்தான் அந்த சீசனுக்கு இந்த மாமா வந்து தொலைந்திருக்கிறாரோ?’ என்று அவள் ஜன்னலுக்கு வெளியே தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த நிலவைப் பார்த்தபோது, அதன் வழியாக ஒரு புத்தகம் வந்து கீழே ‘பொத்’தென்று விழுந்தது. ‘சரிதான், அவளுக்குத் தூக்கம் எங்கே வரப் போகிறது என்று அவர் நினைத்திருப்பார்; அதற்காக எதையாவது படித்துப் பொழுதைப் போக்கட்டுமே என்று இதை விட்டெறிந்திருப்பார்!’ என்று முனகிக்கொண்டே சென்று, அந்தப் புத்தகத்தை எடுத்தாள் அவள். அதன் தலைப்பு வேறு எந்தத் தலைப்பாகவாவது இருந்திருக்கக் கூடாதா? ‘காதலில் ஏமாறாமல் இருப்பது எப்படி?’ என்று இருந்து தொலைத்தது!

‘இந்த எழுத்தாளர்களுக்கு வேறு வேலை இல்லை; எடுத்ததற்கெல்லாம் ‘அது எப்படி, இது எப்படி?’ என்று கேட்டுப் புத்தகம் எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த மாதிரி புத்தகங்களைப் பிரசுரித்து ஊரை ஏமாற்றிப் பிழைப்பதற்கென்றே சில பிரசுரகர்த்தர்கள்; அவற்றை வாங்கிப் படிப்பதற்கென்றே இவரைப் போன்ற சில இளிச்ச வாயர்கள்’ என்று பொரிந்து கொண்டே புத்தகத்தைப் பிரித்தாள் அவள். ‘என் ஆருயிர்த் தோழி மதனாவுக்கு, ஆழ்ந்த அனுதாபத்துடன், அன்புள்ள அருணா’ என்று அதன் முதல் பக்கத்தில் கொட்டை கொட்டையாக எழுதப்பட்டிருந்தது!

நாலு பேருக்குத் தெரியாமல் நடந்த
கலியாணத்தைப் பற்றி நாலு பேர்...

4

றுநாள் காலை; கையில் ஒரு சிறு பெட்டியுடன் தலையில் முக்காட்டைப் போட்டுக்கொண்டு பஸ் ஸ்டாண்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/30&oldid=1385080" இலிருந்து மீள்விக்கப்பட்டது