பக்கம்:சுயம்வரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

சுயம்வரம்

"இது என்னடியம்மா, அதிசயமாயிருக்கிறது! நேற்றுத் தான் கலியாணம் நடந்தது; அதற்குள் 'குளிக்கவில்லை ' என்கிறாயே?" என்றாள் அருணா.

"போடி, நான் இன்று குளிக்கப் போவதில்லை என்று சொன்னால்..."

"அதுதானே பார்த்தேன்! சாந்திக் கலியாணத்துக்குப் பிறகு நீ இன்னும் ஒரு தரம் வாந்தி கூட எடுக்கவில்லையே!"

"அதெல்லாம் இருக்கட்டும்டி, மாதவனிடம் நான் ஏதோ ஏமாந்து விட்டேன் என்று சொன்னாயே, அது என்னடி?"

"அதை மட்டும் என்னிடம் கேட்காதேயடியம்மா, எனக்கு ஏன் வீண் பொல்லாப்பு?"

"சும்மா சொல்லுடி?"

"ஊஹும்; எதைச் சொன்னாலும் சொல்வேன், அதை மட்டும் சொல்ல மாட்டேன்!"

"சும்மா சொல்லுடின்னா...?"

"வேண்டாம். அப்படியே சொல்வதாயிருந்தாலும் அதைக் கலியாணத்துக்கு முன்னால் சொல்லியிருக்க வேண்டும்: இப்போது சொல்லி என்ன புண்ணியம்?"

"அதற்கு நீ ஏன் நேற்றிரவு அந்தப் புத்தகத்தை ஜன்னல் வழியாக விட்டெறிய வேண்டுமாம்?"

"அதையும் கலியாணத்துக்கு முன்னாலேயே உன்னிடம் கொடுக்க வேண்டும் என்றுதான் இருந்தேன். அதற்குள் அந்தப் பாவி வந்து..."

"எந்தப் பாவி...?"

"மாதவன்தான்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/35&oldid=1384944" இலிருந்து மீள்விக்கப்பட்டது