பக்கம்:சுயம்வரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

சுயம்வரம்

"அவன்தான் உன்னிடம் அந்தக் கதையைச் சொன்னானா?"

"ஆமாம்."

"அதை நீயேதான் என்னிடம் சொல்லேன்?"

"அவர் 'வேறு யாரிடமும் சொல்லக்கூடாது' என்று சொல்லி விட்டல்லவா அதை என்னிடம் சொல்லியிருக்கிறார்!"

"பரவாயில்லை, சொல்லு? நானும் அதை வேறு யாரிடமும் சொல்லாமல் இருக்கிறேன்!"

"அந்த மாதவன் ஒரு சமயம் எம்.யு.சி. கிரவுண்டில் கிரிக்கெட் ஆடியபோது அதைப் பார்க்க நீ அங்கே போயிருந்தாயா?"

"ஆமாம், போயிருந்தேன்."

"அப்போது பந்தை அடிப்பதற்காக மட்டையை வீசிய அவன், அப்படியே சுழன்று கீழே விழுந்தானா?"

"விழுந்தார்!"

"அதைப் பார்த்து நீ கை கொட்டிச் சிரித்தாயா?"

"சிரித்தேன்!"

"அந்தச் சிரிப்புக்காகத்தான் அவன் இப்போது உன்னைப் பழி வாங்கிக்கொண்டிருக்கிறானாம்!"

"நல்ல கதைதான், போ! திரௌபதி எதற்கோ தன்னைப் பார்த்துச் சிரித்தாள் என்பதற்காகத் துரியோதனன் அவளைச் சூதில் வென்று துகில் உரிந்தானாமே, அந்த மாதிரி கதையாகவல்லவா இருக்கிறது இது?"

"கரெக்ட், அதே கதைதான் இதுவும் இல்லாவிட்டால் கலியாணத்துக்கு முன்னாலேயே அவன் உனக்கென்று ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/37&oldid=1384949" இலிருந்து மீள்விக்கப்பட்டது