பக்கம்:சுயம்வரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சுயம்வரம்



“அப்படியா, காராபூந்திக்குப் பதிலா வேறு ஏதாவது பண்ணியிருக்கலாம்' என்றான் இவன், அவளை ஏறெடுத்துக் கூடப் பார்க்காமல்.”

“'ஏன்?”

“ஒண்ணொன்னா தின்னு முடியறதுக்குள்ளே பொழுது விடிந்துவிடும் போல இருக்கே? ” “அதெல்லாம் ஒண்ணும் விடியாது; சாப்பிடுங்க. இதோ, நான் போய்க் காபி கொடுத்தனுப்பறேன்!” என்று லட்டு மாமி திரும்பினாள்.”

“அம்மாம்மா அத்தான் ரொம்ப வேடிக்கையாப் பேசறாரு, இல்லேம்மா?' என்றாள் நீலா.”

'எல்லாம் உன்னைப் பார்த்த சந்தோஷந்தாண்டி, இப்படி வா' என்று மறுபடியும் அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் மாமி.

அப்போது, 'டாக்ஸிகூட வந்து வாசலில் நின்று விட்டது, மாப்பிள்ளை நீங்கள் 'ரெடி'யாக வேண்டியதுதான் பாக்கி' என்று சொல்லிக்கொண்டே மாதவனுக்கு எதிர்த்தாற் போல் வந்து நின்றார் அவருடைய மாமா.

"எதற்கு?' என்று ஒன்றும் புரியாமல் கேட்டான்மாதவன்.

'உங்களுக்குத் தெரியாதா, சினிமாவுக்கு சீட்டெல்லாம் கூட ரிசர்வ் செய்தாகிவிட்டதே' என்றார் அவர்.

அட இழவே பகற்கனவுகூட இவர்களுக்காகப் பலித்து விட்டதுபோல் இருக்கிறதே? என்று அவன்திரும்ப, 'ஆகட்டும் மாப்பிள்ளை, சீக்கிரம்' என்று அவசரப்படுத்தினார் மாமா.

அப்போது அவர் நின்ற தோரணையைப் பார்த்தால், அவனாக வராவிட்டால் அவர் அவனைக் குண்டுக்கட்டாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/47&oldid=1384910" இலிருந்து மீள்விக்கப்பட்டது