பக்கம்:சுயம்வரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

சுயம்வரம்



“என்ன இங்கே நான் ஒரு மனைவி இருக்க, அங்கே இன்னொரு மனைவியா”?

“ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பதெல்லாம் பழமை, பத்தாம்பசலித்தனம். டபிள், ட்ரிபிள் என்று இருப்பதுதான் இப்போது புதுமை, புரட்சி”

'“அட, பாவி”'

'“அப்கோர்ஸ், இருக்கலாம்; அவன் உனக்குப் பாவியாக இருக்கலாம். ஆனாலும் அவனை நான் புண்ணியவான் என்றே சொல்ல வேண்டும்”...'

'“ஏனாம்”?"

'“மீண்டும் ஒரு முறை என் இதயத்தை உன்னிடம் திறந்து காட்ட அவன் எனக்கொரு சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறானல்லவா”?

'கலியானத்திற்குப் பிறகுமா?"

'“அதில் என்ன சந்தேகம்? இப்போதெல்லாம் காதலுக்குக்கலியாணம் ஒரு முடிவும் அல்ல; முட்டுக்கட்டையும் அல்ல. உன்னை நான் தொடர்ந்து காதலிப்பேன் கண்ணே, தொடர்ந்து காதலித்துக்கொண்டே இருப்பேன்”

“அட, என் ராஜா அதிசயக் காதலாயிருக்கிறதே, இது?”

'“அபூர்வமான காதல் என்றும் சொல்லு”'

'“அதற்குத்தான் இப்போது வந்திருக்கிறீர்களா, நீங்கள்”?

'“இல்லை, அதற்கு மட்டும் இல்லை; அதர்மம் எங்கெல்லாம் தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் தர்மத்தைக் காக்க அடியேன் வருவேன்”!

சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாவோ?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/49&oldid=1384905" இலிருந்து மீள்விக்கப்பட்டது