பக்கம்:சுயம்வரம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

49

"தூங்கத்தான்"

"என்ன, காதல் தூங்குவதற்கா?"

"ஆமாம், இல்லாவிட்டால் மனம், 'மதனா, மதனா!' என்று சபித்துக்கொண்டிருக்க, கண்கள் 'எங்கே, எங்கே?' என்று தேடிக்கொண்டே... இருக்குமே!"

"அதற்காக...?"

"வேறொன்றும் செய்ய வேண்டாம்; இந்த ஆப்பிளைச் சாப்பிட்டுவிடு, போதும். நான் நேரே சொர்க்கத்துக்குப் போய் விடுவேன்"

"திரும்பி வர மாட்டீர்களே?"

"நான் அந்த சொர்க்கத்தைச் சொல்லவில்லை; 'ஒதெல்லோ' நாடகத்தில் ஷேக்ஸ்பியர் சொல்கிறானே, அந்த சொர்க்கத்தைச் சொல்கிறேன்!"

"அது என்ன சொர்க்கம்?"

"அதை வாயால் சொல்லக்கூடாது, மனத்தால் மட்டுமே எண்ணி மகிழவேண்டிய சொர்க்கம் அது!"

"ஓ, அப்படியானால் இதை நான் சாப்பிட்டு என்ன பிரயோசனம்? போனால் திரும்பி வர முடியாத சொர்க்கம் எதற்காவது நீங்கள் போவதாயிருந்தால் சொல்லுங்கள், அவசியம் சாப்பிடுகிறேன்; இல்லாவிட்டால் வேண்டாம்!" என்று அவன் கொடுத்த பழத்தை அவன் மேலேயே வீசி எறிந்தாள் அவள்.

அப்போது, "என்ன, மீண்டும் தோல்வியா?" என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்தாள் அருணா.

"ஆமாம்" என்றான் ஆனந்தன்.

"கவலைப்படாதீர்கள்; தோல்வியே வெற்றிக்கு அடிப்படை" என்றாள் அவள்.

சு-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/52&oldid=1384661" இலிருந்து மீள்விக்கப்பட்டது