பக்கம்:சுயம்வரம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

63

"எனக்கு மட்டுமா தூக்கம் வரவில்லை? உனக்கும்தான் தூக்கம் வரவில்லை போலிருக்கிறதே!" என்றாள் அருணா.

"எனக்குத் தூக்கம் வராமலிருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன; உனக்கு...?"

"அதில் பாதியாவது இருக்காதா?"

"இருக்கட்டுமடி யம்மா, இருக்கட்டும்' என்று கையைத் தூக்கிக் காட்டி அவளை ஆசீர்வதிப்பது போல் ஆசீர்வதித்துவிட்டு, அப்படியே திரும்பிப் படுத்தாள் மதனா.

"வெறுமனே திரும்பிப் படுத்தால் தூக்கம் வந்து விடுமா? இந்தா, இந்தத் தலையணையையாவது மாதவன் என்று நினைத்துக்கொண்டு மார்போடு அணைத்துக்கொள்!" என்று அவள்மேல் ஒரு தலையணையைத் தூக்கிப் போட்டாள் அருணா.

"ஏன், இதை நீதான் ஆனந்தன் என்று நினைத்து அணைத்துக் கொள்ளக் கூடாதா?" என்று அதே தலையணையை அருணாவின் மேல் தூக்கிப் போட்டாள் அவள்.

இவள் சிரித்து, "தெரியும்டி யம்மா, தெரியும்" என்றாள்.

"என்ன தெரியும்?" என்றாள் அவள்.

"ஆனந்தனை எனக்குப் பிடிக்காதென்று தெரிந்திருந்தும் நீ ஏன் அவன் பெயரைச் சொல்லிக்கொண்டு இந்தத் தலையணையைத் தூக்கி என்மேல் போடுகிறாய், தெரியுமா?' வெறும் தலையணையைத் தூக்கிப் போட்டு நான் என்னடி செய்ய? எனக்காக நீயாவது போய் அந்த மாதவனை அழைத்துக்கொண்டு வரக்கூடாதா?' என்கிறாய்; அப்படித்தானே? கொஞ்சம் பொறு; பொழுது விடியட்டும் நானே போய் அவன் காதைப் பிடித்து இழுத்துக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/66&oldid=1384699" இலிருந்து மீள்விக்கப்பட்டது