பக்கம்:சுயம்வரம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

இவை மட்டுமா? விதம் விதமான பெண்களுடன் வேறு அவர் ‘உலா’ வர வேண்டியிருக்கிறது; தன்னால் முடியாவிட்டாலும் வேறு யாருடைய செலவிலாவது வீட்டுக்கு ஒரு டெலிபோனும், போக்குவரத்துக்கு ஒரு காரும் அவசியம் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!

இத்தனையும் இல்லாத ஒருவன் என்னதான் எழுதிக் கிழித்தாலும் நீங்கள் எங்கே அவனை எழுத்தாளன் என்று மதிக்கிறீர்கள்? நீங்கள் எங்கே ‘எழுத்தாளன்’ என்று ஒப்புக் கொள்கிறீர்கள்?

இந்த லட்சணத்தில் இது ‘விளம்பர யுக’மாக மட்டுமல்ல, ‘கவர்ச்சி யுக’மாகவும் இருந்து தொலைகிறது.

இந்த யுகத்தில் ‘எழுத்துக் கவர்ச்சி’யைத் தவிர வேறு எந்தக் கவர்ச்சியும் இல்லாத நான், இருந்தாலும் அவற்றையெல்லாம் அன்றிருந்து இன்றுவரை அடியோடு வெறுத்து வந்திருக்கும் நான், இப்போதுதான் ‘எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம்?’ என்பதை உணர்கிறேன். உணர்ந்து, எனக்காக மட்டுமல்ல, உங்களுக்காகவும் வருந்துகிறேன்.

போகட்டும்; நடந்ததை மறந்து நிகழ்ந்ததைக் கொஞ்சம் கவனிப்போமா?...

என் வாழ்க்கையில் 1946-ம் ஆண்டை நான் சிறப்பான ஆண்டு என்று சொல்ல வேண்டும். அந்த ஆண்டில்தான் தமிழ்நாடு அரசினர் முதன்முதலாக அளிக்க முன்வந்த சிறுகதைகளுக்கான பரிசை நான் முதன் முதலாகப் பெற்றேன். அதைத் தொடர்ந்து வெளியான ‘பாலும், பாவையும்’ என்ற நாவல் மக்களின் பேராதரவைப் பெற்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/7&oldid=1384547" இலிருந்து மீள்விக்கப்பட்டது