பக்கம்:சுயம்வரம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

67

"தெறி கெட்டு எங்கேயாவது ஓடிவிட மாட்டீர்களே?"

"ஊஹும்."

"மாதவன் சார், அதைக் கேட்டு நீங்கள் அழுதால் அதை என்னால் தாங்க முடியாது, சார்!" என்றாள் அவள், தன் கைகளைப் பின்னால் கட்டி, மெல்ல ஆடி அசைந்து கொண்டே.

"அழ மாட்டேன், சொல்லு சீக்கிரம்?" என்றான் அவன், ஆடாமல் அசையாமல் நின்று.

"நீங்கள் என்னை வெறுக்கலாம்; உங்களை என்னால் வெறுக்க முடியாது, சார்!"

"யாரையும் யாரும் வெறுக்க வேண்டாம், சொல்லு?"

"பெண் தன்னுடைய ஆசையைக் கண்ணால் சொல்வதுதான் எங்கும், எப்பொழுதும் உள்ள வழக்கம். ஆனால்..."

அவள் மீண்டும் நகத்தைக் கடித்தாள்; அவன் பல்லைக் கடித்தான். "நீ வாயால் சொல்லப் போகிறாயாக்கும்? சொல்லேன்!" என்றான்.

"வெட்கமாயிருக்கிறது, சார்!" என்றாள் அவள், மென்னகையுடன்.

"வெட்கப்படுவதாயிருந்தால் சொல்லாதே!" என்றான் அவன் புன்னகையுடன்.

"சொல்லாமலும் இருக்க முடியவில்லை."

"சரி, சொல்லு?"

"நான்... நான்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/70&oldid=1384708" இலிருந்து மீள்விக்கப்பட்டது