பக்கம்:சுயம்வரம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

சுயம்வரம்


கடமை இல்லாமல், கண்ணியம் இல்லாமல், கட்டுப் பாடும் இல்லாமல் காதல் மட்டும் எப்படி வளரும், வாழும் என்று தெரியவில்லையே?....

அந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஆனந்தனைவிட அருணா எவ்வளவோ மேல்!

'நிறைவேறும் காதலில் மட்டுமல்ல, நிறைவேறாத காதலிலும் என்னால் இன்பத்தைக் காண முடியும்' என்று சொல்லும்போது அவள்தான் இந்தக் காதல் உலகத்தில் எவ்வளவு உயர்ந்து நிற்கிறாள்!

துரதிர்ஷ்ட வசமாகக் கலியாணத்துக்குப் பிறகும் என்னைத் தெரிந்து காதலிக்கும் அருணாவும் சரி, தெரியாமல் காதலிக்கும் நீலாவும் சரி, என்னதான் தவறு செய்தாலும் இன்றுவரை என்னுடைய அனுபதாபத்தைப் பெறக் கூடியவர்களாய்த்தான் இருக்கிறார்களே தவிர, ஆத்திரத்தைக் காட்டக் கூடியவர்களாக இல்லையே? இது என்ன தர்ம சங்கடம் எனக்கு!

என்மேல் கொண்ட மோகத்தில் இந்த அருணாதான் எத்தனை பொய்கள் சொல்லியிருக்கிறாள்!

உண்மை வெளிப்படும்போது, அதற்காக அவள் கொஞ்சம் வெட்கப்படவாவது செய்கிறாளா? அதுவும் இல்லை; அதற்கும் ஒரு சிரிப்புச் சிரித்து வைக்கிறாள்!

இப்படிச் சிரித்துச் சிரித்தே அவள் என்னைக் கொன்று விடுவாளோ?

அதிலும், சிறிது நேரத்துக்கு முன்னால் அவள் வந்து சொல்லிவிட்டுப் போன அந்தப் பொய்?....

என்னைக் கொல்லாமல் கொல்லும் பொய்யல்லவா? அதை எவ்வளவு துணிவோடு வந்து அவள் என்னிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/87&oldid=1384782" இலிருந்து மீள்விக்கப்பட்டது