பக்கம்:சுயம்வரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

‘கல்கி அலுவலக’த்தை விட்டு, கல்கி அவர்கள் எச்சரித்தும் கேளாமல் விலகினேன்.

நடக்கக்கூடாத இது நடந்தது 1951-ம் ஆண்டில்.

அப்போது ‘சுத்த சுயமரியாதை வீர’னாக இருந்து வந்த நான், இப்போது சில இடங்களில், சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்துகொண்டு போவதுபோலப் போயிருந்தால் நானும் மற்றவர்களைப் போல சினிமா உலகிலும் பிரகாசித்திருக்கலாம். அந்த ‘புத்தி’ அப்போது இல்லாததால் அதிலிருந்தும் விலகி, சுதந்திர எழுத்தாளனாக இருந்து ‘சுடர்’ விடப் பார்த்தேன். நான் விட முயன்றாலும் என்னை விட விரும்பாத சுயமரியாதையோ அதற்கும் குறுக்கே நின்று தொலைந்தது.

‘இதெல்லாம் எதற்கு, சொந்தமாக ஒரு பத்திரிகையே நடத்திப் பார்த்துவிடுவோமே? என்று 1954-ம் ஆண்டில் ‘மனித’னை ஆரம்பித்தேன். மக்கள் ஆதரவு அதற்கு அமோகமாக இருந்தும், விற்பனையாளர்கள் செய்த ‘சத்திய சோதனை’யாலும், அந்தச் ‘சத்திய சோதனை’ யிலிருந்து அவ்வப்போது மீள்வதற்கு வேண்டிய பொருளாதார வசதியோ, மீட்பதற்கு வேண்டிய நண்பர்களோ இல்லாததாலும் அதுவும் பிறந்த ஓராண்டு காலத்துக்குள்ளேயே பிராணனை விட்டுவிட்டது.

இதனால் எனக்கு நேர்ந்த இழப்புகளிலெல்லாம் மிகப் பெரிய இழப்பு, என்னுடைய நீண்ட நாள் நண்பரும், ஸ்டார் பிரசுரத்தின் உரிமையாளருமான திரு. ராமநாதனின் நட்பை நான் இழந்ததாகும்.

அதற்குப் பின் எத்தனையோ பிரசுரகர்த்தர்கள், எத்தனையோ பிரசுரங்கள் - ஒன்றும் உருப்படியாக வர-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/9&oldid=1384561" இலிருந்து மீள்விக்கப்பட்டது