பக்கம்:சுயம்வரம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

சுயம்வரம்


அவளுக்கு. வராமல் இருந்திருந்தால் அவளும் ஆனந்தனைப் பார்த்திருக்க முடியாது; ஆனந்தனும் அவளைப் பார்த்திருக்க முடியாது.

அதிலும், அந்த ஆனந்தன் என்றும் வருவது போலவா அன்று வந்தான்? வரும்போதே ஏதோ ஒரு 'மரணச் செய்தி'யைக் கொண்டுவருபவன்போல் அல்லவா வந்தான்?

அவனைப் பார்த்ததும் மதனா என்னவோ வழக்கம்போல் தன் முகத்தைத் திருப்பிக் கொள்ளத்தான் செய்தாள். ஆனால் எடுக்கும் போதே, "எல்லாம் முடிந்துவிட்டது மதனா, எல்லாம் முடிந்துவிட்டது!" என்று அவன் சொல்லும்போது, அவளால் அவனை எப்படித் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியும்? "என்ன முடிந்துவிட்டது?" என்று அவனை எப்படிப் பதட்டத்தோடு கேட்காமல் இருக்க முடியும்? கேட்டாள்.

அது போதாதா, அவனுக்கு? "இதெல்லாம் உலகத்தில் சகஜம்; மனத்தைக் கொஞ்சம் திடப்படுத்திக் கொள்" என்று அவன் அவளை மேலும் கொஞ்சம் குழப்பினான்.

"போதும், விஷயத்துக்கு வாருங்கள்!" என்றாள் அவள், பொறுமையிழந்து.

"அதுதான் வந்துகொண்டே இருக்கிறேனே, மாதவன்... மாதவன்..."

"என்ன அவருக்கு?"

"அவருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை ; எல்லா ஆபத்தும் உனக்குத்தான்!"

"இவ்வளவுதானே? அதைப் பற்றி நான் கவலைப்பட வில்லை; அப்புறம்?"

"ஆபத்து உன் உயிருக்கு வருவதாயிருந்தால் அதைப் பற்றி நீ என்ன, நான்கூடக் கவலைப்பட மாட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/93&oldid=1384803" இலிருந்து மீள்விக்கப்பட்டது