பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 சுரதா ஒர் ஒப்பாய்வு ثانوي முதலடியைத் தேனாக்கி, அடுத்த டுத்து முளைக்கின்ற தொடரடியை அமுத மாக்கி விதவிதமாய்ச் சந்ததய நட்புண் டாக்கி வியப்புமிகு உவமைகளால் புதுமை தேக்கிப் பதமுடைய பாவினமாம் விருத்த மாக்கிப்...

  • - * * * * இயற்ற லானான்."

போலி உடும்பு’ என்னும் தலைப்பில் இருபது ஆண்டுகளுக்குமுன் பல்லியைப்பற்றிப் பத்திரிகை யில் சுரதா ஒரு கவிதை எழுதியிருந்தார். வழக்கத்துக்கு மாறாக, அக்கவிதை அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பட்டிருந்தது. ஒசையினிமையோடு அமைந் திருந்த அக் கவிதையைப் பாராட்டி அவருக்கு ஒர் கடிதம் எழுதினேன். அதோடு அக்கவிதையின் ஒரு சீரை மாற்றியமைத்தால், கருத்துச்சுவை மிகும் என்று எழுதினேன். ஆனால் சுரதா அதற்கு இணங்கவில்லை. 'அறுசீர்விருத்தத்தில் கருத்துச்சுவை கெட்டாலும் பரவாயில்லை; ஒசையினிமை கெடக் கூடாது' என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தார். ஒரு விருத்தத்தில் முதற்சீர் எத்தகைய அசை யமைப்போடும், ஒசையமைப்போடும் அமைந்திருக் கிறதோ, அதே அசை அமைப்போடும், ஒசையமைப் போடும் எல்லா அடிகளின் முதற்சீரிலும் மாறாது வரவேண்டும் என்பது அவர் கொள்கை. செய்யுளில் இன எழுத்துக்கள் எதுகையாய் வரலாம் என்பது அனுமதிக்கப்பட்ட விதி. அதற்கு