பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கவிஞர் முருகு சுந்தரம் கம் மந்திர முனிவரின் மையல் மனைவி அழகில் குறையே அற்றவள் ஆதலின் நகைமுகம் கொண்ட தங்கையை அகல்யா தேவியென் றழைக்க லாயினரே!" சந்தப் பாடலும் அவர்கையில் சிந்தும் அருவியாகச் சிரித்துக்கொண்டு ஓடிவருகிறது: கரும்பொடு நான்பிறந்தேன் - இளங் காற்றொடு தானசைந்தேன்! அரும்பொடு தான்வளர்ந்தேன் - மலர் ஆனயின் தேன்திறந் தேன். நதிமணல் மீதிருந்தேன் - அவர் தட்டகல் மீதிருந்தார்! புதுமழை பெய்கையிலே - ஒரு புடவைக் குடைபிடித்தேன். என்பெயர் அன்னமென்றேன் - பசிக் கில்லையோ அன்னமென்றார்! பொன்மணி மண்டபத்தில் - இதழ்ப் புன்னகை அன்னமிட்டேன். காவிரி ஆழமென்றேன் - அவர் காதலே ஆழமென்றார்! சேவலேன் கூவுதென்றேன் - விழிச் சேனையேன் தாக்குதென்றார்!