பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா ஒர் ஒப்பாய்வு 7 பதிப்புரை தனிப்புகழ் கொண்ட் சாதனையாளர்! தமிழகக் கவிஞர்களில் தனித்தன்மை மிக்கவர் உவமைக் கவிஞர் சுரதா, இவர் புரட்சிக் கவிஞரின் சீடர்; சுப்புரத்தினதாசன் எனப் பெயர் சூட்டிக் கொண்டவர். அதன் சுருக்கமே சுரதா எனும் பெயர். இதை நாடறியும். எழுபத்தெட்டு வயதை முடித்து எழுபத்தொன்பதாம் வயதைத் தொட்டுள்ள நேரத்தில் அவரைப் பற்றிய இந்த நூல் வருகிறது. 1965ஆம் ஆண்டில் அவர் எழுதிய கவிதைத் தொகுப்பினை, சுரதாவின் தேன்.மழையை எமது பதிப்பகம் வெளியிட்டது. தேன்.மழைக்குத் தமிழக அரசின் முதற்பரிசை அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணா.அவர்கள்வழங்கினார்.முப்பதாண்டுகளுக்குப்பின் தேன்.மழை நாலுக்காக உவமைக் கவிஞர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராஜராஜன் விருதும் பரிசும் பெற்றார். முப்பதாண்டுகளாகஉவமைக்கவிஞரிடமிருந்து குறிப்பிடும்படி யான நூல் எதுவும் வெளிவரவில்லை. இப்பொழுது சுரதா அவர்களைப் பற்றி ஒர் ஒப்பாய்வு நரலை எழுதியுள்ளார் கவிஞர் முருகு கந்தரம் அவர்கள்.