பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கவிஞர் முருகு சுந்தரம் മ போட்டியில் கலந்து கொண்டவர்களுள் எல்லாரையும் விட இளைஞனாக அவன் இருந்தான். கவிதைப் போட்டிக்குக் கருப்பொருளாக (theme) இயேசுநாதர் நிகழ்த்திய அற்புதம் ஒன்று வழங்கப் பட்டது. இயேசு, மேரி அன்னையோடு கானாவூர் என்னுமிடத்தில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்றிருந்தார். திருமண வீட்டார் வந்திருந்த விருந்தினர்களுக்கு அப்பமும் திராட்சைச் சாறும் வழங்கினர். பாதி பேருக்கு வழங்கும்போது திராட்சைச் சாறு தீர்ந்து விட்டது. திருமண விருந்தில், ஒரு பொருளைப் பாதி பேருக்குப் பரிமாறி, மீதிப்பேருக்குப் பரிமாறாமல் விடுவது பெரிய குற்றமாகக் கருதப்படும். திருமண வீட்டார் செய்வதறியாது திகைத்தனர். இதையறிந்த மேரியன்னை தம் திருமகனை அழைத்து ஏதாவது வழிசெய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். உடனே இயேசு பெருமான் ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பும்படி சொன்னார். பிறகு அந்நீரைத் தம் கண்களால் உற்றுப் பார்த்தார். உடனே அத் தண்ணிர் செந்நிறத் திராட்சைச் சாறாக மாறிவிட்டது. இதுவே இயேசு பெருமான் நிகழ்த்திய 'கானாவூர்க் கல்யாண அற்புதம். இந்தக் கருவை மையமாக வைத்துப் பலரும் பக்கம் பக்கமாகக் கவிதைகளை எழுதிக் குவித்தனர்.