பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா ஓர் ஒப்பாய்வு 1 | 1 கடற்கரையில் உள்ள உப்பங்கழிவரை செல்வதுண்டு. அப்போது சிறிய சங்குப் பூச்சிகளும் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு உப்பங்கழிகளில் வீழ்ந்து விடுவதுண்டு. அதைக் கண்டு வருந்திய கடல், தன் திரைக் கைகளால் உப்பங்கழியில் வீழ்ந்து கிடக்கும் சங்குப் பூச்சிகளை வாரி எடுத்துக்கொண்டு திரும்புவதாகக் கவிஞர் கூறுகிறார். இங்கு கடல் தாயாகவும், சங்குப் பூச்சிகள் கடலின் குழந்தைகளாகவும் கற்பனை செய்யப்படும் நுட்பம் சுவைத்து மகிழ்தற்குரியது. நளவெண்பாவின் மிகச் சிறந்த கற்பனை இதுதான்: கூன்சங்கின் பிள்ளை கொடிப்பவளக் கோடிடறித் தேன்கழியில் வீழத் திரைக்கரத்தால்-வான்கடல் வந்(து) அந்தோ எனவெடுக்கும் அங்கநாட் டாளுடையான் செந்தேன் மலராய்இச் சேய், ஆங்கிலக் கவிஞர்களுள் ஜான்டன் இக்கலையில் ஒப்பற்றவன் என்று கருதப்படுகிறான். தாமஸ் கேரூ என்ற மெய்விளக்கக் கவிஞன், டன்னைச் சமத்காரச் சக்கரவர்த்தி' என்று தன் இரங்கற்பாவில் குறிப்பிடு கிறான். ஜான் டன்னின் புலமை நுட்பம் மிகவும் வியப்பிற்குரியதாகவும், ஆழமானதாகவும் இருக்கும். தன் காதலியைப் பிரிந்து ஜான் டன் ஒருமுறை அயல்நாடு செல்லவேண்டி நேரிட்டது. பிரிவுத் துன்பத்தால் வாடும் காதலிக்கு அவன் கூறும் ஆறுதல்