பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 சுரதா ஓர் ஒப்பாய்வு النقي அமர்ந்திருந்தாலும் அடுத்தமுள் சுற்றுவதற்கேற்பக் குனிந்து நிமிர்வதோடு இல்லம் வந்ததும் நேராகி விடுகிறது. நான் எங்கு திரிந்தாலும் சரியாக வட்டமிட்டுப் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிவரக் காரணமாக ஊன்றி நிற்பவள் நீதானே!" ஜான் டன்னிடத்தில் காணப்படும் நுண்ணிய கவிதை வேலைப்பாடுகள் எல்லாம் சுரதாவிடமும் உண்டு. அவர் எழுதியுள்ள 'அமுதும் தேனும் கதைக் கவிதையின் தலைவனாக வரும் ஜகந்நாதக்கவி நிறைய எழுதாதவன்; குறைவாக எழுதினாலும் நிறைவாகச் செய்யும் ஆற்றல் மிக்கவன். அவனைக் கச்சிதமாகக் கவிதை எழுதிய சங்கப் புலவர்களோடு ஒப்பிடுகிறார் சுரதா. அதைச் சொல்லும் முறை மிகச் சுவையானது. - - நாட்டில் கூடை முறம் கட்ட முடியாதபடி பனையோலைப் பஞ்சம் வந்துவிட்டதாம். ஏன்? இடைக்காலப் புலவர்கள் தாங்கள் எழுதும் சுவடி களுக்காகப் பனை மரங்களையே மொட்டையடித்து விட்டார்களாம். சு - 8