பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 கவிஞர் முருகு சுந்தரம் 4. குடைசெய்ய, கூடைமுறம் கட்ட, ஏழை குடியிருக்கும் குடிசைக்குக் கூரை போட, படுக்கும்பாய் பின்னமுடி யாத வாறு பனைஒலைப் பஞ்சம் உண் டாக்கி வந்த இடைக்காலத் தமிழ்ப்புலவர் போன்று, நூற்கள் ஏராள மாய்எழுதிக் குவித்தி டாமல் கடைச்சங்க காலத்துப் புலவர் போன்று கச்சிதமாய் ஓரிரண்டு சுவடி தந்தோன்" என்று பாடுகிறார் சுரதா. மிகவும் நுட்பமான கற்பனை, அதே சமயத்தில் அழகான அங்கதமும்கூட. அதே கவிதையில் அக்பர் மகள் லவங்கியின் அழகை வருணிக்க வந்த கவிஞர், அவளுடைய மார்புக் கச்சைப் பற்றி மிக நுட்பமாகக் கற்பனை செய்கிறார். காயம் இருக்குமிடத்தில்தானே கட்டு இருக்க வேண்டும்? ஆனால் கட்டு இடம் மாறியிருக்கிறதாம். ஆயிரந்தேன் கூடும்பூக் காடும் சேர்ந்த அடையாளப் படையல் அவள்! நல்லோர் நூலின் பாயிரம்போல் புன்னகையை முதலில் காட்டும் பருவப்பெண்; அவள்மார்பில் வளர்ந்த வில்வக் கா பின்மேல் காயமில்லா திருந்தும், ஆங்கோர் கட்டுண்டு மொட்டுமொழிக் கிளிகள் செய்த காயங்கள் கனியிதழில் இருந்தும், அந்தக் காயங்கள் மீது துணிக் கட்டே இல்லை."