பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 | சுரதா ஒர் ஒப்பாய்வு تقني ஜகந்நாதக் கவியின் புலமையை மெச்சி அவனுக்குப் பரிசளிக்க விரும்பிய அக்பர், 'உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார். தனக்கு அவர் பெற்றெடுத்த அழகுமயில் லவங்கியே வேண்டும் என்பதைக் கவிஞன் கேட்கும் முறை மிகச் சாதுரியமானது. குதித்தோடும் குதிரைகளோ, மதிக்கும் முத்துக் குவியல்களோ, யானைகளோ வேண்டாம் வேந்தே! எதைத் தின்றால் பிறகிந்தப் புவிமீ துள்ள எல்லாமே கசந்திடுமோ அதனை, இந்த அதிமதுரச் செங்கரும்பைக் கனியின் கொத்தை ஆணிப்பொன் மேனிஅன்னத் தோணி தன்னை மதுமதியை, அழகான ஆசை வாசல் வைத்திருக்கும் ஆரணங்கை அளித்தால்போதும்' இப்படிக் கேட்டால் எதிரிகூடத்தன் பெண்ணைக் கொடுத்து விடுவான். அம்பிகாபதிக்கும், ரோமி யோவிற்கும் இந்தப் பேச்சுச் சாதுரியம் இருந் திருந்தால் வீணாகச் செத்திருக்க மாட்டார்கள். காளமேகம் வைணவர்; அவருடைய காதற் கிழத்தி மோகனாங்கி சைவ சமயத்தைச் சார்ந்தவள்; திருவானைக்காவாசி. ஒருநாள்.அவளைக்காளமேகம் தேடிச் சென்றபோது, அவள் கதவைத் திறக்க மறுத்துவிட்டாள். காரணம் கேட்டார் காளமேகம்.