பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கவிஞர் முருகு சுந்தரம் شه பாவேந்தரிடமிருந்து வேறுபட்டுத் தனித்து இயங்கிய சுரதாவின் கவிப்போக்கை இந்நரலாசிரியர் மேல் நாட்டுக் கவிஞரோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளது புதியதாகும். கவிஞர் சுரதாவின் கவி அரசும் ஆட்சிப் பரப்பும் குறிப்பிடத் தக்க தனித்தன்மையானவை. வெள்ளைப் பாட்டுகளும், சள்ளைப்பாட்டுகளும் பெருகி யுள்ள காலம் இது. உள்ளுறை உவமங்கள் செறிந்த, உணர்ந்து மகிழுத்தக்க, உள்ளம் அள்ளும்படியான உயர்ந்த கவிதைகள்தோன் றாதா எனும் ஏக்கம் உள்ளது. சுரதா அவர்களின் பழங் கவிதைகள் இப்பொழுதும் நெஞ்சில் ஊஞ்சலாடுவது ஓரளவு ஆறுதலாயுள்ளது. ஒன்றன்மேல் ஒன்றாக அடுத்தடுத்துப் பல செய்திகளை அடுக்கிக் காட்டும் சுரதாவின் உத்தியும் உழைப்பும் இளங் கவிஞர்களிடையே பரவவேண்டும். பரந்த நூலறிவும், பக்குவப் பட்ட தொகுப்பறிவும், சிறந்த மொழியறிவும் சேர்ந்திருக்கும் கவிஞர்களே காலத்தை வென்று காட்சிதருவார்கள். அவர்களே சங்கச் சான்றோரின் சாரமாய், சந்ததியினராய்த் திகழ்வார்கள். கீரைகளைப் போல் சில நாட்கள் மட்டுமே வாழும் கவிதைகள் கீர்த்தியைச் சேர்க்குமா? செய்திக் குறிப்பெல்லாம் கவிதை ஆகுமா? சிந்திக்கவும், எண்ணி எண்ணி எப்போதும் உணர்ந்து உள்ளம் மகிழச் செய்வதே கவிதையாகும். திட்பமும் செறிவும் மிக்க சொல்லாரமே கவிதையாகும். ஆழ்ந்த உணர்வின் வெளிப்பாடுகளே உயிர்ப்பான கவிதை ஆகும். அவசர வெளியீடுகள் அவ்வப்போதே மறைந்து விடும். உணர்ச்சி நிலையை ஒசையாலேயே உணர்த்தும் சங்கச் செய்யுள்களின் உயர்வை உன்னிப்போடு ஊன்றிக் கவனித்துக்